Posts

Showing posts from 2014

பிரபு சாலமனின் கயல்

Image
பிரபு சாலமனின் கயல் மைனா, கும்கி படங்களின் இயக்குனர் பிரபு சாலமனின் திரைப்படமான கயல் (டிசம்பர் 2014), அப்படங்களின் பாதையிலேயே பயணிக்கிறது. இப்படத்திலும் காதல் தான் கரு. அவரது வழக்கமான பாணியிலேயே இதையும் இயக்கியுள்ளார். ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளார்.  படத்தின் கதாநாயகன் சந்திரன் சிறப்பானதொரு நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார். ஆனந்தி படத்திற்கு மிகப் பொருத்தமான தேர்வு. பக்கத்து வீட்டுப் பெண் போல், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சந்திரனின் சக பயணியாக வரும் வின்சென்ட் அருமையானதொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் ஆகச் சிறந்த அம்சம், காமிரா தான். மகேந்திரனின் ஒளிப்பதிவு ரசிகர்களை கொள்ளையிடுகிறது. இசை, மைனா, கும்கி அளவிற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றே சொல்ல வைக்கிறது. படம் ஆரம்பித்து ஏறகுறைய அரைமணி நேரம் ஊர் சுற்றுவதைப் பற்றி பாத்திரங்கள் பேசுகின்றனர். கடந்த வாரம் இயக்குனர் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியை கேட்பது போலுள்ளது. கதை அரைமணி நேரம் நகரவேயில்லை. பல தத்துவங்களை உதிர்க்கின்றனர். கதாநாயகனின் பார்வையற்ற தந்தை உலகை தரிசிப்பதால் கிடைக்கும் வ...

பாய்ஸ் கம்பெனி காலத்து வெயில் - காவியத்தலைவன் (Kaviya Thalaivan - Review)

Image
பாய்ஸ் கம்பெனி காலத்து வெயில். ம.ஜோசப். காவியத்தலைவன் (நவம் – 2014) நாசர், சிதார்த், ப்ரித்வி ராஜ், வேதிகா, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, எழுத்தாளர் ஜெய மோகனின் வசனத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வசந்த பாலனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படமாகும். பாய்ஸ் நாடக கம்பெனிகள் தமிழ் நாட்டில் கோலோச்சிய காலத்தின் (ஏறக்குறைய 1870 - 1930) கதை நடக்கிறது. (படத்தில் காலம் பற்றி தெளிவாக ஏதும் கூறப்படவில்லை;) அக்காலத்தில் அப்படி இருந்த ஒரு பாய்ஸ் கம்பெனி போல ஒரு புனைவு (கற்பனை எனக் கொள்ளலாம்) டிராமாக் கம்பெனி தான்  படத்தின் கதைக் களம். அதன் மாந்தர்கள்தான் படத்தின் கதா பாத்திரங்கள். ஒரு சில மாந்தர்களும் அக்காலத்தின் வாழ்ந்த மனிதர்களின் புனைவாகத்தான் படைக்கப்பட்டுள்ளனர். சங்கர தாஸ் சுவாகிகள், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் போன்றோர்கள் வாழ்ந்த கால கட்டம். படத்தின் சில புனைவு பாத்திரங்கள் சிவ தாஸ் சுவாமிகள், காளியப்பா, வடிவாம்பாள். வசந்த பாலன் நிறைய இப்படத்திற்கு உழைத்துள்ளார். படித்திருக்கிறார். வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யும் அவரது எண்ணம் போற்றுதலுக்...

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.

Image
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். வழக்கமான பார்த்திபன் படம்தான். அதே மாதிரியான கிண்டல், கேலி, நக்கல், நய்யாண்டி கவிதைத் தெறிப்புகள்.  சில இரட்டை அர்த்த வசனங்கள் ஆனால் அவரது: வழக்கமான குத்துப் பாட்டு இல்லை வழக்கமான தொப்புள் சீன்கள் இல்லை அடி தடி சண்டைகள் இல்லை. வில்லன் என்ற ஒரு ஆள் இல்லவே இல்லை. கதாநாயகி, கதாநாயகன் என யாரையும் கூற முடியாது. அப்புறம்  கதை என ஒன்றும் இல்லை என்பதுவும் உண்மைதான் முடிவு என ஒன்றும் இல்லை. சினிமா பற்றி பல விபரங்களைக் கூறுகின்றனர். சும்மா படம் முழுதும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் சில சமயங்களில் புன்னகைக்க முடிகிறது. பெரிதாக எதையும் சொல்ல வில்லை. பெரிதாகவும் எதுவும் இல்லை. அதனால் பெரிதாக எதையும் எழுத இயலவில்லை. ஆனாலும் படம் ஒடுகிறது. அதற்கு காரணம் சரியான மாற்றுப்படம் இல்லை.  பச்சக் குதிரை, உள்ளே வெளியே, புதிய பாதை  எடுத்தவரிடம் எதிர்பார்த்தது தவறுதான். தமிழ் சினிமாவில் ஏதோ புதியதாய் நடக்கிறது என்பதை பார்த்திபன் புரிந்து கொண்டிருக்கிறார், என்பதுதான் ஆறுதல்.  பார்த்திபன்,மீண்டும் இதே போல் எதுவும...

அஞ்சான் - மும்பை ரவுடிகளின் தலைவன்

Image
ரவுடிகளின் தலைவன் என பெயர் வைத்திருக்கலாம். ரவுடிகளின் சண்டை எனவும் பெயர் வைத்திருக்கலாம். இதற்கு பாம்பே போக வேண்டாம், தூத்துக்குடியோ, மதுரையோ போதும். கொஞ்சம் அரிவாள்கள் வேண்டும் அவ்வளவே. பீமாவின் உல்டா. அது ராம் கோபால் வர்மாவின்  சத்யா வில் ஒரு சிலவற்றை உருவியது. சத்யா -70%. அஞ்சான் - 7% விக்ரமிற்கு பீமா. சூர்யாவிற்கு அஞ்சான். பெரிய நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர். மனோஜ் பாஜ் பாயின் நடிப்பிற்காக சத்யாவைப் பார்க்கலாம் ரவுடிகள்    I T Employees போல் வருகின்றனர். மீட்டிங் போட்டுக் கொல்லுகின்றனர். சம்ந்தாவின் கவர்ச்சி, லிங்குசாமியின் புரட்சி. லிங்குசாமியின் அனைத்து படங்களின் கருவும் ஆனந்தம் படத்தில் உள்ளது.  லிங்குசாமிக்கு ஹிந்தி படம் எடுக்க ஆசை வந்திருப்பது போல் தெரிகிறது.  முக்கால் வாசி ஹிந்தி டயலாக்குகள். லிங்கு சாமி ஹிந்தியில் வசனம் எழுதுகிறார்ப்பா.  மும்பை நிழலுலகத்திப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் போல் படம் எடுத்துள்ளார்.  விக்கி பீடியாவில் நிறைய விபரஙகள் கிடைக்கும். பணத்தை வீணடித்திருக்கிறார்கள். படத்தின் காமெட...

A.R.Murga Doss - Ezhaam Arivu - An analysis.

Image
இந்தியாவின் ( வியாபர ரீதியில் பெரு ) வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ். தீனா, ரமணா, கஜினி ஆகிய தமிழ் படங்களையும், ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தையும், கஜினி என்ற இந்தி படத்தையும் இயக்கியுள்ளவர் ஏ.ஆர். முருக தாஸ். அவர் கதை சொல்லும்பாணி, அவருக்கேயான தனித்தன்மை வாய்ந்தது. அவரது காமிரா மொழி அதியசிக்கச் செய்வது, அதிர்ச்சிக்குள்ளாக்குவது, பயமுறுத்துவது, பிரமிப்பூட்டுவது.. ரமணா படத்தில் புகழ் பெற்ற சிறைக் காட்சியில் பெற்றோர்கள் ஒடிவரும் காட்சி ஒரு சிறந்த உதாரணமாகும். இது போல் பல சிறப்பான காட்சிகளைக் கொண்டது அப்படம். பெரும்பாலும் திரில்லர் ( thriller ) வகைப் படங்களை ஒத்தது அவரது படங்கள். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஏழாம் அறிவு ( அக்டோபர் 2011 ) திரைப்படம் பற்றி இக்கட்டுரை விமர்சிக்கிறது.        ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவ இளவரசரான போதி தர்மரின், மருத்துவ அறிவையும், தற்காப்பு கலை நுட்பங்களையும், தற்போதைய, அவரின் வம்சத்தைச் சார்ந்த நிகழ் கால மனிதனுக்கு, அதி நவீன மரபணு பொறியியல் ஆராய்ச்சி மூலம், நினைவுக்கு கொண்டு வந்து, நிகழ் கால ஆபத்திற்...

Pasanga and Marina - Cinemas of Pandi Raj - An analysis

Image
பசங்க மற்றும் வம்சம் படங்களின் இயக்குனர் பாண்டிராஜின் மூன்றாவது படம் மெரினா (பிப்ரவரி 2012). மெரினா கடற்கரை, அனாதைச் சிறுவர்கள், சில விளையாட்டுகள், பெரியவர்கள், அவர்களுக்கிடையேயான உறவு சிக்கல்கள்; இடையே ஒரு காதல்; இவற்றினூடாக பின்னப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின் யதார்த்தமான ஒரு சித்தரிப்பே மெரினா வாகும். நெய்தல் நில மக்களுக்கு கடல் ஒரு தெய்வம்; அவர்களின் ஆதித் தாய்; கடற்கரை வாழ்விடம். குடும்பற்றவர்கள், குடும்பத்தால் துரத்தப்பட்டவர்கள், கைவிடப்பட்டோர், அனாதைச் சிறுவர்கள், சிறுமிகள், ஏழைகள், ஆகியோருக்குப் புகலிடமாக விளங்குவதும் கடற்கரை. குறிப்பாக மெரினா கடற்கரை. மெரினா படமும் இதை அழகாகப் பதிவு செய்கிறது. கைவிடப்பட்ட ஒரு முதியவரின் பாத்திரம் ஒரு சிறப்பான பாத்திர படைப்பு. அவர்தான் படத்தின் இறுதிகாட்சிகளுக்கு உயிரூட்டுகிறார். அவரது கண்ணீர், நம் கண்களை குளமாக்குகிறது. அவரது மரணம் குறித்த காட்சிகள் படத்தின் அதி அற்புதமான காட்சிகள் எனலாம். அதே போல், படத்தில் வரும் தபால் காரரின் பாத்திரம். அது ஒரு மீட்பரைப் போன்றது. இது ஒரு பழைய கதையை நினைவூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பரிசு வராதா?  என ஏங்க...

இயக்குனர் வசந்த பாலனின் சினிமா - ஆய்வு.

Image
ஆல்பம், வெயில் மற்றும் அங்காடித் தெரு படங்களின் இயக்குனர் வசந்த பாலனின் நான்காவது படம் அரவாண் (மார்ச்-2012). தமிழுக்கு புதிய கதைகளம். யாரும் சித்தரிக்காத கிராமத்து வாழ்வு. புதுமையான கேமிரா கோணங்கள். இப்படி இப்படத்தின் பல சிறப்புகளைக் கூறிக் கொண்டே போகலாம். அவரது மற்ற எல்லாப் படங்களையும்விட மிக சிறப்பான தொழில் நுட்ப நேர்த்தியுடன் அமைந்துள்ளது, இப்படம் என்றால், அது மிகையில்லை.                                                               களவையே தொழிலாகக் கொண்ட கள்ளர் நாட்டின்  ஒரு ஊரில் (வேம்பூர்) வசிக்கும் பசுபதி (கொம்பூதி) கொத்து என அழைக்கப்படும் குழுவினருடன் களவுக்குச் செல்பவர். களவு பற்றிய அனைத்து நுட்பங்களும் தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. களவிலும் சில விதி முறைகள், தொழில் தர்மங்கள் உள்ளன. கருப்பன் அவர்கள் தெயவம். மாத்தூர் என்ற கிராமத்திற்கும், சின்ன வீரம்பட்டி ...

Cinemas of Sarkunam - An Analysis

Image
சற்குணத்தின் வாகை சூட வா (அக்டோபர் 2011) படம் தமிழில் ஒரு முக்கியமான திரைப்படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழுக்கு புதிய கதைகளம். யாரும் சித்தரிக்காத கிராமத்து வாழ்வு. புதுமையான கேமிரா கோணங்கள். யதார்த்தமான கதை சொல்லல், யதார்த்தமான கிராமத்து மக்கள், இப்படி இப்படத்தின் பல சிறப்புகளைக் கூறிக் கொண்டே போகலாம். இப்படத்தை எடுத்தற்காகவே இயக்குனர் சற்குணத்தைப் பாராட்டலாம். இது குறித்த விமரிசனங்களை இனி காணலாம். ஒரு கிராமத்தில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வாழும் மக்களின் குழந்தைகளுக்கு, கல்வி கற்றுக் கொடுக்கச் செல்லும் ஆசிரியர், சூளை முதலாளிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி, கல்வி கற்றுக் கொடுப்பதுதான் படத்தின் கரு. 1966-ல் கதை நடப்பதாக கூறப்படுகிறது. கிராமம் கண்டெடுத்தான் காடு. கண்டெடுத்தான் காடு கிராம மக்கள் வெள்ளந்தியாக காட்டப்படுகின்றனர். அவர்கள் கற்றுக் கொடுக்க வந்த ஆசிரியரை கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கின்றனர். போதாதற்கு ஒருவர் ஆட்டு கிடாயை வைத்து முட்டவைத்து விரட்டப் பார்க்கின்றார். அவர்களின் குழந்தைகள் கற்று கொடுக்க வரும் ஆசிரியரிடம் கிண்டல் செய்தும், நையா...

தமிழ் சினிமாவில் கிறிஸ்துவர்கள்

தமிழ் சினிமாவில் கிறிஸ்துவர்கள் ம.ஜோசப் ராயப் பேட்டை நர்சு பேரு மேரி நான் வாங்கித் தந்தேன் அரபு நாட்டு சேரி கேள்விப்பட்டேன் மாமா பேரு மாரி ஒண்டித் தோப்பு மாரி நான் ஜகா வாங்கி கேட்டுப்புட்டேன் சாரி, அயாம் வெரி சாரி.             தேவா இசையமைப்பில் 90களில் வந்த இப்பாடல், இக்கட்டுரையில் சொல்ல வேண்டிய விபரங்களின் சாரத்தை சுருக்கமாகக் கூறிவிடுகிறது. தமிழ் சினிமா கிறிஸ்தவர்களைப் பற்றிய என்ன நினைக்கிறது என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். தமிழ் திரைப்படங்களில் கிறிஸ்துவர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர்? என்பதைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.       கிறிஸ்துவ மக்களை குறிவைத்து எடுக்கப்படும் ஒரு வகைப் படங்கள் உள்ளன. இவைகளை பக்தி படங்கள் என்ற வகையில் சேர்க்கலாம். அன்னை வேளாங்கண்ணி, வில்லியனூர் மாதா, கருணாமூர்த்தி, ஜீசஸ், ஸ்வாதி நட்சத்திரம், ஞான சௌந்தரி போன்றவை இவ்வகைக்கு சில உதாரணங்களாகும். இவ்வகைப் படங்களைப் பற்றி இக்கட்டுரை பேசவில்லை. கிறிஸ்தவ பெண்கள்     ...