(முன் குறிப்பு: இயேசு கிறிஸ்துவின் காலகட்டத்தில், யூதேயாவின் சமூக நிலையை களமாகக்கொண்டது இக்கதை. அது கீழே தரப்படுகிறது.)  பேரரசர் அகஸ்டஸ் சீசர் காலத்தில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தார். காலம் ஏறக்குறைய கி.மு 5 அல்லது 6. ரோம ஆளுனரான பெரிய ஏரோதிற்கு பயந்து, ஜோசப், குழந்தை இயேசு மற்றும் மேரியுடன் எகிப்தில், சில காலம் வாழ்ந்தார். பின் இயேசுவின் இளமைக்காலம் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரில் கழிந்தது. அதனாலேயே நசரேயன் என அவர் அழைக்கப்படுகிறார். அதுவும் ரோம ஆட்சிக்குட்பட்டதாகும். ஏறக்குறைய கி.பி. 27-ல் அவர் போதிக்க ஆரம்பித்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மக்கள் பணி, வேதாகமத்தின்படி, கலிலேயாவிலிருந்து, யூதேயா வரைக்குட்பட்ட பகுதிகளிலேயே இருந்தது.  இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையேதான் அவர் போதித்தார். கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிரானதாக இருந்தது. இயேசுவுக்கு இருந்த முதன்மையான நோக்கமே, மக்களை யூத அதிகார மையங்களின் (குருமார்கள் மற்றும் பிற) பழமைவாத பிற்போக்குப் பிடியில் இருந்து மீட்டு எடுப்பதும், இறைவனின் ஆட்சியை (Kingdom of God) நிறுவு...
 
Comments
Unnecessary hype was created for this movie.
VERY GOOD