பிரபு சாலமனின் கயல்

பிரபு சாலமனின் கயல்

மைனா, கும்கி படங்களின் இயக்குனர் பிரபு சாலமனின் திரைப்படமான கயல் (டிசம்பர் 2014), அப்படங்களின் பாதையிலேயே பயணிக்கிறது. இப்படத்திலும் காதல் தான் கரு. அவரது வழக்கமான பாணியிலேயே இதையும் இயக்கியுள்ளார். ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளார். 

படத்தின் கதாநாயகன் சந்திரன் சிறப்பானதொரு நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார். ஆனந்தி படத்திற்கு மிகப் பொருத்தமான தேர்வு. பக்கத்து வீட்டுப் பெண் போல், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சந்திரனின் சக பயணியாக வரும் வின்சென்ட் அருமையானதொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் ஆகச் சிறந்த அம்சம், காமிரா தான். மகேந்திரனின் ஒளிப்பதிவு ரசிகர்களை கொள்ளையிடுகிறது. இசை, மைனா, கும்கி அளவிற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றே சொல்ல வைக்கிறது.

படம் ஆரம்பித்து ஏறகுறைய அரைமணி நேரம் ஊர் சுற்றுவதைப் பற்றி பாத்திரங்கள் பேசுகின்றனர். கடந்த வாரம் இயக்குனர் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியை கேட்பது போலுள்ளது. கதை அரைமணி நேரம் நகரவேயில்லை. பல தத்துவங்களை உதிர்க்கின்றனர். கதாநாயகனின் பார்வையற்ற தந்தை உலகை தரிசிப்பதால் கிடைக்கும் வெளிச்சத்தப் பற்றி கதாநாயகனின், மூலம் இயக்குனர் வகுப்பெடுக்கிறார். அது புற ரீதியான வெளிச்சத்தைப் பற்றியது.  ஊர் சுற்றுவதால் கண்டையக்கூடிய ஊள்ளார்ந்த அக வெளிச்சத்தைப் பற்றிதல்ல. காண்கிறதினால் கண்கள் திருப்தியடைகிறதில்லை, என்பதை இயக்குனர் அறிந்து கொள்ள வேண்டும்.

ஊர் சுற்றுவது என்பது வெறுமனே இயற்கை காட்சிகளை காண்பது மட்டுமில்லை. பல்வேறு மக்கள், மொழி, வாழ்வியல், கலாச்சாரம், வரலாறு போன்றவைகள் பற்றி இயக்குனருக்கு எந்த வித புரிதலும் இல்லை. எல்லோரும் , தங்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம் ஊர் சுற்ற வேண்டும் எனக் கூறிய, தன் வாழ்வு முழுதும் ஊர் சுற்றியாக வாழ்ந்த  ராகுல்ஜி ஊர் சுற்றி எழுதிய புத்தகங்களை இயக்குனர் அவசியம் படிக்க வேண்டும். அப்போதுதான் ஊர் சுற்றலின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். "கோசா ஓதி நோடி; தேசா ஓடி நோடி", என்பது ஒரு கன்னட பழமொழி. அதன் அர்த்தம்; அகராதியை படித்து அறிவை வளர், தேசங்களை கண்டு அறிவை வளர், என்பதாகும்.

படத்தில் வில்லன் என யாரரும் இல்லை. இயற்கைதான் வில்லன். திரைக் கதை சிறு சிறு நகைச்சுவைகள் மூலம் நகர்கிறது. இறுதிவரை அப்படியே இருந்து விடுகிறது. எதிர்ப்பார்ப்பை உருவாக்கி அதை அப்படியே விட்டு விடுகிறார்கள். கதை மிகவும் பலகீனமாக உள்ளது.

கயல் தொழில் நுட்பத்தில் தேறிவிடுகிறது. இயக்குனர் என்னவெல்லாம் விரும்பினாரோ, அதையெல்லாம் சொல்லிவிட்டார்.சொல்லுவது மட்டுமே ஒரு நல்ல சினிமா அல்ல.



Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்