கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.
வழக்கமான பார்த்திபன் படம்தான்.
அதே மாதிரியான கிண்டல், கேலி, நக்கல், நய்யாண்டி
கவிதைத் தெறிப்புகள்.
சில இரட்டை அர்த்த வசனங்கள்
ஆனால் அவரது:
வழக்கமான குத்துப் பாட்டு இல்லை
வழக்கமான தொப்புள் சீன்கள் இல்லை
அடி தடி சண்டைகள் இல்லை.
வில்லன் என்ற ஒரு ஆள் இல்லவே இல்லை.
கதாநாயகி, கதாநாயகன் என யாரையும் கூற முடியாது.
அப்புறம்
கதை என ஒன்றும் இல்லை என்பதுவும் உண்மைதான்
முடிவு என ஒன்றும் இல்லை.
சினிமா பற்றி பல விபரங்களைக் கூறுகின்றனர்.
சும்மா படம் முழுதும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்
சில சமயங்களில் புன்னகைக்க முடிகிறது.
பெரிதாக எதையும் சொல்ல வில்லை.
பெரிதாகவும் எதுவும் இல்லை.
அதனால் பெரிதாக எதையும் எழுத இயலவில்லை.
ஆனாலும் படம் ஒடுகிறது. அதற்கு காரணம் சரியான மாற்றுப்படம் இல்லை.
பச்சக் குதிரை, உள்ளே வெளியே, புதிய பாதை
எடுத்தவரிடம் எதிர்பார்த்தது தவறுதான்.
தமிழ் சினிமாவில் ஏதோ புதியதாய் நடக்கிறது என்பதை
பார்த்திபன் புரிந்து கொண்டிருக்கிறார்,
என்பதுதான் ஆறுதல்.
பார்த்திபன்,மீண்டும் இதே போல் எதுவும்
தயவு செய்து செய்யாதீரகள்,
தோல்வியடைவீர்கள்.


 
Comments