மிக மிக குறுகிய கால முத்தம் அது
- Get link
- X
- Other Apps
அப்பெண்னைப் பார்த்தேன்.
மிகவும் குண்டாக இருந்தாள்.
கல்யாணம் ஆகியிருந்ததா எனத் தெரியவில்லை.
அருகில் ஒருவன் மிக மிக நெருக்கமாக,
பாதி உடம்பை உரசியபடியே அமர்ந்த்திருந்தான்.
இருவரும் தினசரியில் வந்திருந்த
குறுக்கெழுத்துப் புதிரை
விடுவிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தனர்.
அவள் சட்டென, மெதுவாக
அவன் காதுகளை கடித்தாள்.
அப்பெட்டியில் நானும், மற்றொரு குடும்பத்தினரும்,
ஒரு முதியவரும் இருந்தோம்.
அவர்களின் அன்யோன்யத்தை தடுக்க முடியாத
மாலை வேளை அது.
அவளின் முழங்கை அவனது
மடியினில் இறுத்திக் கொண்டிருந்தது.
அடிக்கடி சிரித்துக் கொண்டனர்.
திடீரென அவள், அவனது உதடுகளில்
கண்ணிமைக்கும் நேரத்தில் முத்தமிட்டாள்.
மிக மிக குறுகிய கால முத்தம் அது.
அந்த நெருக்கம்,
அவர்களுக்கு புதியது என கூற இயலாது.
அடுத்த நிறுத்தத்தில் விடைபெற்றுச் சென்றான்
அந்த நடுத்தர வயதினன்.
அந்த நிறுத்தத்தில் வேறொரு இளமையானவன்
அவளிடம் வந்தான்.
அண்ணனோ, தம்பியோ தெரியவில்லை.
எதிரும், புதிருமாக அமர்ந்து,
பல விஷயங்களை பேசியபடியே வந்தனர்.
என்னையும், பிறரையும்
அவ்வப்போது பார்த்துக் கொண்டாள்.
அடுத்த நிறுத்தத்தில் அவர்கள்
இறங்கிச் சென்றனர், வீட்டை நோக்கி.
- ம.ஜோசப்
- Get link
- X
- Other Apps
 
Comments