காலங்களுக்கு வண்ணம் கொடுப்பவன்.
- Get link
- X
- Other Apps
அவன் ஒர் ஆராய்ச்சியாளன்.
காலங்களுக்கு வண்ணம் கொடுப்பது பற்றிய
ஆய்வு செய்து கொண்டிருந்தான்.
வெள்ளிக் கிழமைக்கு என்ன நிறம்?
திங்கட் கிழமைக்கு என்ன நிறம்? -
வாரங்கள், மாதங்கள், வருடங்கள்,
ஆகியவைகளுக்கு கொடுக்க வேண்டிய
வண்ணங்கள் யாவை? -
குறித்த ஆய்வு அது.
காலங்கள், உணர்வுகளுடன்
நெருங்கிய உறவு கொண்டிருப்பவை.
(எப்போதும் திங்கட் கிழமைகள்
இனம் புரியா பயத்தையும், குழப்பத்தையும்
அவனுக்கு ஏற்படுத்துகின்றன.)
அவன் உணர்வுகளுக்கு நிறங்கள்
அளிப்பது பற்றியும் யோசிக்க ஆரம்பித்தான்.
மகிழ்ச்சிக்கு பச்சையையும்,
துக்கத்திற்கு கருப்பையும் வழங்கலாமா?
காதல் தோல்வியினால் வரும் துக்கத்திற்கும்,
தந்தையின் மரணத்தினால் வரும் துக்கத்திற்கும் உள்ள
வித்தியாசத்தை நிறங்களால் வேறுபடுத்தவும்
ஆய்வுகள் செய்தான்.
அந்த குழப்பமான ஆய்வாளன்,
மனித குணங்களுக்கும் வண்ணம் கொடுப்பது பற்றியும்
ஆராயலாலான்.
அவன் ஒன்று மட்டும் தெளிவாக அறிவான்.
பல்லாயிரக்கணக்கான வண்ணங்களால்
நிறைந்தது இவ்வுலகு.
மனிதர்களுக்கு வண்ணங்களை
பயன்படுத்த தெரியவில்லை.
மேலும்,
அவர்கள் பெரும்பாலும்
வண்ணங்களை தவறாக பயன்படுத்துகின்றனர்.
- ம.ஜோசப்
- Get link
- X
- Other Apps
 
Comments