Skip to main content

வினோதங்கள் நிறைந்த குழந்தையின் கண்கள்


குழந்தையின் கண்கள் அதிசயங்களால்
நிரம்பியிருக்கின்றன.

அன்று பெய்த, அவளுக்கான
முதல் மழை,
அவளுக்கேயான குளிர்ச்சியை,
கண்களில் ஒட்டிச் சென்றது.

ஆச்சரியங்கள் வழிந்தோடும் உலகு
என அவள் நினைத்திருக்கலாம்.

மிகுந்த ஆச்சரியத்துடன்
ஒளியைக் கண்ட கண்கள்,
இருளைக் கண்டும் மரூண்டன.

அன்றைய இடியும், மின்னலும்
பயங்கரங்களும் நிரம்பியது உலகு
எனவும் உணர்த்தியது அவளுக்கு.

ஆச்சரியங்களும், மாயங்களும், மர்மங்களும்
நிரம்பிருக்கும் உலகு இது, அவளுக்கு.

நான் துயரத்திலாழ்ந்தேன்,
நான் எப்போது அக்கண்களைத் தொலைத்தேன்?

ஆண்டவர்,
விசித்திரங்கள் நிறைந்த,
நம்பிக்கும் ஒளிரும் அக்கண்களை,
எப்போது எனக்குத் தருவார்?.

ம.ஜோசப்

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்