குளங்கள் நிரம்பியது குறித்து - ஜோசப் மரியமைக்கேல்
| குளங்கள் வெறுமையாக கிடந்தன. முட்செடிகள் மண்டிகிடந்தன. ஊரின் குப்பைகளுக்கும்இ கழிவுகளுக்கும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருந்தன. குளங்களை காப்பாற்றுவது யார்? -- மழை பெய்ய ஆரம்பித்தது மீண்டும் பெய்தது தொடர்ந்து பெய்தது. குளங்கள் நிரம்ப ஆரம்பித்தன. கசடுகளை மூடின. குப்பைகளை மூடின. கொஞ்சம்இ கொஞ்சமாக நீர் மட்டம் வளர்ந்து கொண்டேயிருந்தது. அதன் அனைத்து துயரங்களையும் தண்ணீர் மூழ்கடித்தது. எங்கும் நீர் நீர் மட்டுமே. நிரம்பிய குளம் கண்களுக்கு இதமாகியது. அனைவரும் வியந்தனர். குளம் ரம்யமானது என்று பாராட்டினர். அதன் கீழ் உள்ள கசடுகளையும்இ முட்களையும் கழிவுகளையும்இ அவர்கள் மறந்தே போயினர். | 
 
Comments