Posts

Showing posts from 2018

இயேசு கிறிஸ்துவின் வரலாற்றுப் பின்னணி அல்லது கிறிஸ்து ஏன் உவமைகளினூடே பேசினார்? ம.ஜோசப்

இயேசு கிறிஸ்துவின் காலத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்து அடிப்படையான விபரங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அவரது வரலாற்றுப் பின்னணி, அவரைக் குறித்தும், அவரது போதனைகள் குறித்தும் புதிய புரிதல்களுக்கு வழிவகுக்கும் என்பதை நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வரலாற்றுப் பின்னணி கிறிஸ்து பிறப்பு வரையுள்ள இஸ்ரவேலரின் வரலாறு குறித்த இச்சுருக்கமான குறிப்பு இக்கட்டுரையின் சில விபரங்ளை புரிந்து கொள்ள உதவும். பெரு வெள்ளத்தில் காப்பற்றப்பட்ட நோவாவின் புதல்வர்களான சேம், காம், யாபேத்து ஆகியோர்களில், சேமின் (Shem) வழிமரபினர் செமிட்டிக் இனத்தவர் (semitic tribes) என அழைக்கப்படுகின்றனர். இஸ்ரவேலர் ஒரு செமிட்டிக் இனத்தவர் ஆவர். செமிட்டிக் இனத்தவராகிய ஆபிரகாம் ஏறக்குறைய கி.மு.1900-ல், குடும்பத்துடன் கானான் தேசத்திற்கு வருகிறார். அவர்களது மூதாதையர்கள் ஊர் (சுமேரிய நாகரீக நகர்) பகுதியைச் சார்ந்தவர்கள். கானான் தேசம் என்பது இப்போதுள்ள இஸ்ரவேல் நாடு, பாலஸ்தீன நாடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்கும். அவரின் வழி மரபினரான யாக்கோபு, எகிப்து நாட்டிற்கு, கானான் தேசத்தில் ஏற்பட்ட மாபெரும் வறட்சியின் கார...

குளங்கள் நிரம்பியது குறித்து - ஜோசப் மரியமைக்கேல்

குளங்கள் வெறுமையாக கிடந்தன. முட்செடிகள் மண்டிகிடந்தன. ஊரின் குப்பைகளுக்கும்இ கழிவுகளுக்கும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருந்தன. குளங்களை காப்பாற்றுவது யார்? -- மழை பெய்ய ஆரம்பித்தது மீண்டும் பெய்தது தொடர்ந்து பெய்தது. குளங்கள் நிரம்ப ஆரம்பித்தன. கசடுகளை மூடின. குப்பைகளை மூடின. கொஞ்சம்இ கொஞ்சமாக நீர் மட்டம் வளர்ந்து கொண்டேயிருந்தது. அதன் அனைத்து துயரங்களையும் தண்ணீர் மூழ்கடித்தது.  எங்கும் நீர் நீர் மட்டுமே. நிரம்பிய குளம் கண்களுக்கு இதமாகியது. அனைவரும் வியந்தனர். குளம் ரம்யமானது என்று பாராட்டினர். அதன் கீழ் உள்ள கசடுகளையும்இ முட்களையும் கழிவுகளையும்இ அவர்கள் மறந்தே போயினர்.

புளியமரங்களின் வரலாறு குறித்து - ஜோசப் மரியமைக்கேல்

புளியமரங்கள் மனித குலத்திற்கு பெரிதும் பயன்படுகின்றன என்பதை அறிவேன். அவைகள் இன்றும் இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளை கடவுள் படைத்த காலம் தொட்டே இங்கு இருக்கின்றன. உலகெங்கிலும் இருப்பினும் இந்தியாவிலும், தழிழகத்திலும் அவைகள் இருக்கின்றன அவைகள் சந்தித்த புயல்கள் ஆயிரக்கணக்கானவையாக இருக்கலாம். கொள்ளை நோய்கள் ஒரு கோடி இருக்கலாம். விலங்குகளின் கொடுமைகளை  மீறியும் இப்புவியில் தங்கள் வம்சத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. நால் வழி சாலைகள் அழித்தவை ஆயிரமாயிரங்கள் என்ற போதிலும் அவைகளின் வம்சத்தை  அடியோடு அழியாவண்ணம் பாதுகாத்து கொண்டன. உலகின் முடிவு பரியந்தம் அவைகள் தங்களைப் பாதுகத்துக் கொள்ளுமா? என்பது நான் அறியாதது.

இறக்கைகளுடன் பறப்பது - ஜோசப் மரிய மைக்கேல்

இறக்கைகளுடன் பறப்பது அல்லது மனதின் கரைகளை உடைப்பது. இறுக்கமான தசைகள் தளர்வடைந்தன. மனதின் இறுக்கங்கள் உடைந்து போயின. மெலிதான இதயம் படைத்தவனாயிருந்தேன். குழந்தைகள் மீது பாசம் பெருக்கெடுத்தது. கட்டியணைத்து, கண்ணீர் சிந்தி அன்பை பொழிய வேண்டுமென தோன்றியது. மனைவியின் மீதான கோபங்கள், வருத்தங்கள் ஓடி ஒளிந்து கொண்டன. எந்தவித தன்முனைப்புமின்றி அவளிடம் நெருங்கியிருந்தேன். பல தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கவும் தயாராக மாறியிருந்தேன். எதிர்காலம் குறித்த இனம்புரியா கவலைகளுக்காக அழவும் செய்தேன். இப்படியும் ஒரு நல்ல மனிதன் எனக்குள் சாத்தியமா? தூய ஆவி உட்புகுந்து கசடுகளையெல்லாம் கழுவி தூய்மையாக்கி விட்டிருந்தது. அவன், அவள், அவர்கள் மற்றும் இந்த முழு உலகம் மீது அன்பு பெருக்கெடுத்தது. நான் மது அருந்தியிருப்பதுதான் அதற்கு காரணமா? எனில் நிச்சயமாக இல்லை, என்று மட்டும் கூறுவேன்.

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

(முன் குறிப்பு: இயேசு கிறிஸ்துவின் காலகட்டத்தில், யூதேயாவின் சமூக நிலையை களமாகக்கொண்டது இக்கதை. அது கீழே தரப்படுகிறது.) பேரரசர் அகஸ்டஸ் சீசர் காலத்தில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தார். காலம் ஏறக்குறைய கி.மு 5 அல்லது 6. ரோம ஆளுனரான பெரிய ஏரோதிற்கு பயந்து, ஜோசப், குழந்தை இயேசு மற்றும் மேரியுடன் எகிப்தில், சில காலம் வாழ்ந்தார். பின் இயேசுவின் இளமைக்காலம் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரில் கழிந்தது. அதனாலேயே நசரேயன் என அவர் அழைக்கப்படுகிறார். அதுவும் ரோம ஆட்சிக்குட்பட்டதாகும். ஏறக்குறைய கி.பி. 27-ல் அவர் போதிக்க ஆரம்பித்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மக்கள் பணி, வேதாகமத்தின்படி, கலிலேயாவிலிருந்து, யூதேயா வரைக்குட்பட்ட பகுதிகளிலேயே இருந்தது. இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையேதான் அவர் போதித்தார். கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிரானதாக இருந்தது. இயேசுவுக்கு இருந்த முதன்மையான நோக்கமே, மக்களை யூத அதிகார மையங்களின் (குருமார்கள் மற்றும் பிற) பழமைவாத பிற்போக்குப் பிடியில் இருந்து மீட்டு எடுப்பதும், இறைவனின் ஆட்சியை (Kingdom of God) நிறுவு...

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்

பரிசுத்த வேதாகமத்தில், புதிய ஏற்பாட்டின் கீழ் புனித மத்தேயு, புனித மாற்கு, புனித லூக்கா மற்றும் புனித யோவான் ஆகியோரின் நற்செய்தி நூல்கள் (Gospels) உள்ளன. இவை கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை கூறுகின்றன. மேற்குறிப்பிட்ட நான்கு நற்செய்திகள் அல்லாமல், 80 க்கும் மேற்ப்பட்ட நற்செய்தி நூல்கள் உள்ளதாகவும், பிலிப்பின் நற்செய்தி (Gospel of Philip) மற்றும் மேரி மேக்டலினின் நற்செய்தி (Gospel of Mary Magdalene) ஆகியோரின் நற்செய்தி நூல்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி (Gospel of Judas Iscariot) நூலும் இருப்பதாக National Geographic Channel சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி பற்றி சில விபரங்களை இக்கட்டுரை தருகிறது. பேரரசர் அகஸ்டஸ் சீசர் காலத்தில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தார். காலம் ஏறக்குறைய கி.மு 5 அல்லது 6. பெரிய ஏரோதிற்கு பயந்து, எகிப்தில், ஜோசப் (இயேசுவின் வளர்ப்புத் தந்தை), குழந்தை இயேசு மற்றும் மேரியுடன் சில காலம் வாழ்ந்தார். பின் இயேசுவின் இளமைக்காலம் ...

காலங்களுக்கு வண்ணம் கொடுப்பவன்.

  அவன் ஒர் ஆராய்ச்சியாளன். காலங்களுக்கு வண்ணம் கொடுப்பது பற்றிய ஆய்வு செய்து கொண்டிருந்தான். வெள்ளிக் கிழமைக்கு என்ன நிறம்? திங்கட் கிழமைக்கு என்ன நிறம்? - வாரங்கள், மாதங்கள், வருடங்கள், ஆகியவைகளுக்கு கொடுக்க வேண்டிய வண்ணங்கள் யாவை? - குறித்த ஆய்வு அது. காலங்கள், உணர்வுகளுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பவை. (எப்போதும் திங்கட் கிழமைகள் இனம் புரியா பயத்தையும், குழப்பத்தையும் அவனுக்கு ஏற்படுத்துகின்றன.) அவன் உணர்வுகளுக்கு நிறங்கள் அளிப்பது பற்றியும் யோசிக்க ஆரம்பித்தான். மகிழ்ச்சிக்கு பச்சையையும், துக்கத்திற்கு கருப்பையும் வழங்கலாமா? காதல் தோல்வியினால் வரும் துக்கத்திற்கும், தந்தையின் மரணத்தினால் வரும் துக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நிறங்களால் வேறுபடுத்தவும் ஆய்வுகள் செய்தான். அந்த குழப்பமான ஆய்வாளன், மனித குணங்களுக்கும் வண்ணம் கொடுப்பது பற்றியும் ஆராயலாலான். அவன் ஒன்று மட்டும் தெளிவாக அறிவான். பல்லாயிரக்கணக்கான வண்ணங்களால் நிறைந்தது இவ்வுலகு. மனிதர்களுக்கு வண்ணங்களை பயன்படுத்த தெரியவில்லை. மேலும், அவர...

பேரழிவுகளின் ஆரம்பம்

  காலம் என இல்லாத ஒன்றை கிழமைகள் என்றும், மாதங்கள் என்றும் வருடங்கள் என்றும் கற்பித்துக் கொண்டோம். ஒரு மாபெரும் சமுத்திரத்தை, பல பெயரிட்டு, பல கடல்களாக்கி எல்லைகளையும் வகுத்துக் கொண்டோம். மாபெரும் நிலப் பரப்பை சில எல்லைகளை கற்பித்துக் கொண்டு, சண்டைகளையும், போர்களையும் உருவாக்கினோம். இல்லாத மதத்தையும், சாதியையும் கற்பித்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றோம், உடமைகளை அழித்தோம், ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தோம். சில காதல்களையும், நாம் விட்டுவிடவில்லை. இந்த கற்பிதங்கள் யாவும் இதுவரை, இப்பூமி அறியாதது. அது இவைகளை அறிந்து கொண்ட போது பேரழிவுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது. -  ம.ஜோசப்  

மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி

மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி   அவளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அம்மாவிடம் காதலை தெரிவிக்க வேண்டியிருந்தேன். தனது அம்மாவின் சம்மதத்தை தந்தியில் தெரிவிப்பாளா?, என திகிலோடு காத்திருந்த போதுதான், அந்த தந்தி வந்தது. "அப்பா இறந்துவிட்டார், உடனே புறப்படு." ஒரு மரணத்தை எதிர் கொண்ட அனுபவம் எனக்கிருந்திருக்கவில்லை. அன்று காலையில், மிக பலமாக, தலையில் மோதிக் கொண்டிருந்தேன். ஏனோ, மொட்டையடிப்பது பற்றி காலையில் யோசித்திருந்தேன். சென்ற முறை கேட்க மறந்த சில விஷயங்களை, அப்பாவிடம், கேட்க வேண்டுமென, காலையில் நினைத்திருந்தேன். பல விஷயங்கள், கேள்விகள், பயம் யாவும் மின்னலாய் வந்து போயின. பல மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். பலர் மவ்னமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். தொண்டை வறண்டு போயிருந்தது. அம்மா, தங்கைகள், அண்ணன்கள் நினைவு வந்தது. வீட்டுச் சூழல் பற்றி நினைக்கும் போது பகீரென தொண்டையை கவ்வி பற்றியது. இது நடந்திருக்காது, என பெரிதும் விரும்பினேன் அதற்காக ஜெபம் செய்து கொண்டேயிருந்தேன். மேலும், நான் புறப்பட்டு கொண்டுமிருந்தேன். கைலியும், பணமும் எடுத்துக் கொண்டேன். கூட வந்த வகுப்...

மிக மிக குறுகிய கால முத்தம் அது

  ஒரு புகை வண்டிப் பிராயாணத்தின்போது அப்பெண்னைப் பார்த்தேன். மிகவும் குண்டாக இருந்தாள். கல்யாணம் ஆகியிருந்ததா எனத் தெரியவில்லை. அருகில் ஒருவன் மிக மிக நெருக்கமாக, பாதி உடம்பை உரசியபடியே அமர்ந்த்திருந்தான். இருவரும் தினசரியில் வந்திருந்த குறுக்கெழுத்துப் புதிரை விடுவிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தனர். அவள் சட்டென, மெதுவாக அவன் காதுகளை கடித்தாள். அப்பெட்டியில் நானும், மற்றொரு குடும்பத்தினரும், ஒரு முதியவரும் இருந்தோம். அவர்களின் அன்யோன்யத்தை தடுக்க முடியாத மாலை வேளை அது. அவளின் முழங்கை அவனது மடியினில் இறுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி சிரித்துக் கொண்டனர். திடீரென அவள், அவனது உதடுகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்தமிட்டாள். மிக மிக குறுகிய கால முத்தம் அது. அந்த நெருக்கம், அவர்களுக்கு புதியது என கூற இயலாது. அடுத்த நிறுத்தத்தில் விடைபெற்றுச் சென்றான் அந்த நடுத்தர வயதினன். அந்த நிறுத்தத்தில் வேறொரு இளமையானவன் அவளிடம் வந்தான். அண்ணனோ, தம்பியோ தெரியவில்லை. எதிரும், புதிருமாக அமர்ந்து, பல விஷயங்களை பேசியபடியே வந்தனர். என்னையும், பிறரையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டாள். அடுத...

மலர்கள் கீழே விழுந்ததை எப்போது அறிந்திருப்பாள்?

பேருந்தில் பணிக்கும் போது யாரோ ஒரு பெண் தவற விட்டிருந்த ரோஜா, மல்லிகைச் சரம் மற்றும் கூந்தலூசி (hair pin) காலடியில் பட்டது. தனக்கு அழகைக் கொடுக்கும், வாசத்தைக் கொடுக்கும், என அவள் நம்பிய, மலர்கள் கீழே விழுந்ததை எப்போது அறிந்திருப்பாள்? தனது காதலனுக்காக அவள் அதனைச் சூடியிருக்கலாம். அப்பூக்கள் குறித்தும், அவை பிரத்யேகமாய் அவளுக்குத் தரும் அழகு குறித்தும் அவன் பேசுவதை கேட்கவிருந்த அவளின் ஆசை வாடிப் போய்க் கிடந்தது. கணவனுக்காக அதனைச் சூடியவளாகக் கூட இருக்கலாம். அவள், அவளுக்காகவேக் கூட, ஒரு வேளை, சூடியிருக்கக் கூடும். எப்படி, அதனைத் தவற விட்டிருக்கமுடியும்? தீவிரமாக, ஏதேனும், அவள் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கலாம். அப்பூக்களை தூக்கியெறிய மனமின்றி முகந் தெரியாத, அப்பெண்னைக் குறித்து ஏன் அதிகம் யோசிக்கின்றேன்? -  ம.ஜோசப்  

வினோதங்கள் நிறைந்த குழந்தையின் கண்கள்

வினோதங்கள் நிறைந்த குழந்தையின் கண்கள்   குழந்தையின் கண்கள் அதிசயங்களால் நிரம்பியிருக்கின்றன. அன்று பெய்த, அவளுக்கான முதல் மழை, அவளுக்கேயான குளிர்ச்சியை, கண்களில் ஒட்டிச் சென்றது. ஆச்சரியங்கள் வழிந்தோடும் உலகு என அவள் நினைத்திருக்கலாம். மிகுந்த ஆச்சரியத்துடன் ஒளியைக் கண்ட கண்கள், இருளைக் கண்டும் மரூண்டன. அன்றைய இடியும், மின்னலும் பயங்கரங்களும் நிரம்பியது உலகு எனவும் உணர்த்தியது அவளுக்கு. ஆச்சரியங்களும், மாயங்களும், மர்மங்களும் நிரம்பிருக்கும் உலகு இது, அவளுக்கு. நான் துயரத்திலாழ்ந்தேன், நான் எப்போது அக்கண்களைத் தொலைத்தேன்? ஆண்டவர், விசித்திரங்கள் நிறைந்த, நம்பிக்கும் ஒளிரும் அக்கண்களை, எப்போது எனக்குத் தருவார்?. -  ம.ஜோசப்

பெண்ணியப் பார்வையில் விவிலியம்

பெண்ணியப் பார்வையில் விவிலியம் - ஜெய சீலியின் நூலை முன்வைத்து - ம.ஜோசப்     காலச்சுவடு வெளியீடான பெண்ணியப் பார்வையில் விவிலியம் (டிசம்பர் 2006, ஆசிரியர்: ஜெய சீலி), என்ற நூலுக்கான விமரிசனமாக இக்கட்டுரை / கடிதம் எழுதப்படுகிறது. புனித நூல்களை பன்முக வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் எனும் குரல்கள் உலகெங்கிலும் கேட்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில், பெண்ணிய, தலித்திய நோக்கில் வாசிக்கப்பட வேண்டும் என அவை வலியுறுத்துகின்றன. பன்னெடுங்காலமாக அவை ஆண்களின் பார்வையிலேயே வாசிக்கப்பட்டுள்ளன. ஆதிக்க சக்திகளின் கையில் அவை பெண்களை, தலித்துகளை ஒடுக்க, ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிரானாதாக இருந்தது. அவை அதிகாரங்களின் மையமாகிப் போனதுதான் வரலாறு. இந்நிலையில், பெண்ணிய நோக்கில் விவிலியத்தை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்த நூல், தமிழுக்கு மிக முக்கியமாகிறது. ஆசிரியர் ஜெயசீலியையும், அதனை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்ட வேண்டும். ஜெயசீலி அவர்களின் "பெண் எழுச்சி இறையியல் பார்வ...