Posts

Showing posts from 2013

பொறியியல் கல்லூரி முதல்வர் - ஒரு பலியாடு.

பொறியியல் கல்லூரி முதல்வர் - ஒரு பலியாடு.                                     தமிழகத்தேயே உலுக்கிய ஒரு கொலை தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்துள்ளது. கல்லூரி வட்டாரங்களில் பேராசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்  பரபரப்பாகப் பேசப்படும் சம்பவமாகி உள்ளது. பொறியியல் கல்லூரி முதல்வர், கல்லூரி வளாகத்திலேயே அவரது மாணவர்களாலேயே கொல்லப்பட்டிருக்கிறார். கல்லூரி முதல்வர்களுக்கு கொடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையாகவே இது தோன்றுகிறது. இது உணர்ச்சி வேகத்தில் நடந்த கொலையில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று, அதற்குமுன் அவருக்கு மரண மிரட்டல்களும் வந்துள்ளன. அழிந்தது, முதல்வரின் வாழ்வு மட்டுமல்ல, மூன்று மாணவர்களின் வாழ்வும் தான். ஏன் கல்விக் கூடங்கள் வாழ்க்கையை உருவாக்காமல், வாழ்வை அழிக்கும் கூடங்களாக மாறின? மாணவர்கள் ஏன் கொலை செய்கிறார்கள்? முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏன் மாணவர்களின் பகைவர்களாகிப் போயினர். பொறியியல் கல்லூரிகளில் என்ன நடந்து கொண்டிரு...

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

Image
துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்?                         ம.ஜோசப் பொதுவாக துப்பறியும் நாவல்கள், நாவல் வாசகர்கள் மத்தியில் கோலோச்சுகிறது என்றால் மிகையில்லை. இப்போதும், எப்போதும் துப்பறியும் நாவல்களுக்கு வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றின் விற்பனையும் அதிகம். பரபரப்பு, திகில், விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள் போன்ற வெகுசன நாவலின் கூறுகள் நிறைந்து காணப்படுபவை துப்பறியும் நாவல்கள். அதனால்தான் பெருவாரியான வாசகர்களால் அவை படிக்கப்படுகின்றன. தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும், இறுதியில் தர்மம் எப்படியும் ஜெயித்துவிடும், என்பதுதான் இந்நாவல்களின் மையக் கருத்து. திரைப் படங்களிலும் துப்பறியும் கதைகள் வெற்றிகரமாக கையாளப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் நடித்த வெற்றிப் படமான இதயக்கனி மற்றும் நூறாவது நாள் உட்பட பலத் திரைப்படங்கள் இவ்வகையில் எடுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கால துப்பறியும் நாவலாசிரியர் ஜே.ஆர். ரங்கராஜுவின்...

Novel - Chapter 5

பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன 5 காலையில் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அவரவர், அவரவர் வேலைகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். வெயில் சுள்ளென அடிக்க ஆரம்பித்து விட்டது. கோடை காலம் ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறி. இரவுகளின் சன்னல் கதவுகள் திறக்கப்படுகின்றன. போர்வைகளை மக்கள் துறக்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிறிது காலத்தில் தாங்க முடியாத வெப்பம் தகிக்கும். கோடை காலங்கள் குறித்த புகார்களை மக்கள் இனி கூறிக் கொண்டிருப்பார்கள். இக்குடும்பத்திற்கு கோடைகாலம் முன்பே ஆரம்பித்து விட்டது. யாரும் சூரியனை எங்கும் ஒளித்து வைக்க முடியாது? எல்லோரும் வெப்பத்திற்கு தன்னை அர்பணித்துதான் ஆக வேண்டும். அகிலின் செல் பேசி சிணுங்கியது. அகல்யா. ஹலோ, என்றான். ஏன் போனே இல்லை? என்றாள். கொஞ்சம் வீட்டு வேலை அதிகம். இன்று ஈவினிங் அவசியம் பெரியகோவிலில் மீட் பண்ணலாம், என்றான். சரி, என்றாள். பெண்வீட்டார் திருமணத்தை எப்போது வைத்து கொள்ளலாம், என இருக்கிறார்கள், என கேட்டு வா? என்றாள், அலமேலு. ம் என்றான் எரிச்சலுடன். தனது வேலைகளை முடித்துவிட்டு, பெரிய கோவிலை நோக்கி வண்டியில் பயணித்துக் கொண்ட...

காதல் மற்றும் வழக்கு எண்: 18/9 : பாலாஜி சக்திவேலின் திரைப் படங்கள் குறித்த ஒரு பார்வை.

Image
பாலாஜி சக்திவேலின் திரைப் படங்கள் குறித்த ஒரு பார்வை. எம்.ஜோசப்        தமிழ் திரைப்படங்களை ஒரு பெரிய அளவில் ( broader sense) காதல் படங்கள் எனலாம், என நான் கருதுகிறேன். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் மற்றும் விஜய் பாணி படங்கள், குடும்பப் படங்கள், பக்திப் படங்கள், நகைச் சுவைப் படங்கள், சமூகப் படங்கள் இப்படி எந்தவகைப் படங்களை எடுத்துக் கொண்டாலும் காதல் மைய இழையாகவோ அல்லது துணைக் கருவாகவோ நமது படங்களில் உள்ளது. காதலைச் சொல்லாத படங்கள் ஏறக்குறைய இல்லை எனக் கூறிவிடலாம். காதல் இல்லாத படங்களை நம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற ஐயம் எனக்குண்டு. பன்னெடுங்காலமாக நாம் ரசித்து வரும் வள்ளி திருமணம் நாடகம் ஒரு காதல் கதைதான். எம்.ஜி.ஆர். படங்களில், பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகள் அவரை சூழ்ந்து நெருக்கும் போதும், அவர் காதல் பாட்டு பாட சென்றுவிடுவார். மிகவும் வரவேற்பைப் பெற்ற நகைச் சுவைப் படமான உள்ளத்தை அள்ளித் தா படமும் ஒரு காதல் படம் தான். பக்திப் படமான அன்னை வேளாங்கண்ணியிலும் ஒரு சிறிய காதல் கதை உள்ளது.  மிகவும் பேசப்படும் த்ரில்லர் ( துப்பறியும் )...

Murder at Mukkombu

நாயைப்போல சுற்றி, சுற்றி ம.ஜோசப் லண்டனிலிருந்து வந்த அந்த இளம் ஜோடி, முக்கொம்புக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவளின் சொந்த ஊர் உறையூர். அவனுக்கு வேலூர். பெயர் பாலாஜி. கடந்த வருடம்தான் திருமணம் ஆகியது. அவனுக்கு லண்டலினில் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை. ஒரு மாதம் விடுமுறையில் தமிழ் நாடு வந்துள்ளார்கள். அவள் மிகுந்த மகிழ்ச்சியாய் காணப்பட்டாள். அவனும் அப்படியே. அவன் அடிக்கடி நகைச்சுவையாய் ஏதாவது சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டேயிருந்தாள். முக்கொம்பில் தண்ணீர் அவ்வளவாய் இல்லை. சீசன் இல்லையாதலால், அதிகமாக கும்பல் இல்லை. மதியம் 2 மணி இருக்கும். அங்கொன்றும், இங்கொன்றுமாக பதின் பருவ காதல் ஜோடிகள் ஒன்றிரண்டு காணப்பட்டன. நீ கல்லூரியில் படிக்கும்போது, உன் காதலனுடன் இங்குதான் வருவாயா? என்றான். அது மாதிரி ஏதும் இல்லை, இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்க வேண்டாம், என எத்தனை தடவை சொல்லுவது? என செல்லமாய் கோபித்தாள், நீங்கள் கூட அப்படியிருந்திருக்கலாம் இல்லையா? என்றாள். அவள் அப்படிச் சொன்னாலும், ஒரு கணம் சோகமான அவன் முகம் வந்து போனது. அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஏதோ ஒரு தனியார் பள்ளியி...

Who murdered the Wife?

“அவர் கால் தூசிக்கு நீ சமமாக மாட்டாய்” ம.ஜோசப் கொடைக்கானலில் அந்தக் கொலை நடந்துள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்களில் அந்தப் பெண் மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளாள். அவள் இரு குழந்தைகளுக்குத் தாய். சொந்த ஊர் மதுரை. அவள் கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணி செய்கிறார். கொடைக்கானல் காவல் நிலையத்திலிருந்து எஸ்.ஐ.யும் இரு காவலர்களும் அங்கு விரைந்தனர். இரு குழந்தைகளும், அவள் கணவனும் கவலையுடனும், பதட்டத்துடனும் நின்றிருந்தனர். அங்கு ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. எஸ்.ஐ., பாடி எங்கே? என்றார். ஒதுக்குப்புறமான ஒரு இடத்தைக் அந்தக் கணவன் காட்டினார். அங்கே சென்ற அவர், அதிர்ந்தவராய், அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். குப்புற படுத்திருந்தாள். தலையின் பின் புறத்தில் ரத்தம் நிறைய வழிந்தோடி கழுத்திலும், தரையிலும் பரவியிருந்தது. அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேயிருந்தது. அருகில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதிலும் ரத்தம் பரவியிருந்தது. பின்புறமாய் யாரோ கல்லால் தாக்கியிருக்க வேண்டும். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்து, உயிர் போயிருக்கக் கூடும். சலேத்து மாதா கோவிலின் சற்று ஒதுக்குப்பு...