பொறியியல் கல்லூரி முதல்வர் - ஒரு பலியாடு.
பொறியியல் கல்லூரி
முதல்வர் - ஒரு பலியாடு.
       தமிழகத்தேயே உலுக்கிய ஒரு கொலை தூத்துக்குடி
அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்துள்ளது. கல்லூரி வட்டாரங்களில் பேராசிரியர்கள்,
முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்  பரபரப்பாகப் பேசப்படும் சம்பவமாகி
உள்ளது. பொறியியல் கல்லூரி முதல்வர், கல்லூரி வளாகத்திலேயே அவரது மாணவர்களாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்.
கல்லூரி முதல்வர்களுக்கு கொடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையாகவே இது தோன்றுகிறது. இது
உணர்ச்சி வேகத்தில் நடந்த கொலையில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று, அதற்குமுன் அவருக்கு மரண மிரட்டல்களும் வந்துள்ளன. அழிந்தது,
முதல்வரின் வாழ்வு மட்டுமல்ல, மூன்று மாணவர்களின் வாழ்வும் தான். ஏன் கல்விக் கூடங்கள்
வாழ்க்கையை உருவாக்காமல், வாழ்வை அழிக்கும் கூடங்களாக மாறின? மாணவர்கள் ஏன் கொலை செய்கிறார்கள்?
முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏன் மாணவர்களின் பகைவர்களாகிப் போயினர். பொறியியல்
கல்லூரிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
       மாணவர்கள் முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு சமூக
அவலங்களால் தற்போது பாதிக்கப்படுகின்றனர். நம் மாணவர்களிடேயேபொதுவாக காணப்படும்
கெட்ட பழக்கங்கள் சில உள்ளன. மது அருந்துதல் மிக சாதரணமாகக் காணப்படும் ஒரு பழக்கமாகும்.
மாணவர்கள் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் மது அருந்தும் விருந்து (party) சர்வ சாதரணமாக
தற்போது மாணவர்களிடையே காணபப்படுகிறது. மதுவின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே மிகவும்
அதிகரித்து வருகிறது. மது வெறி மாணவர்களை தைரியமாக குற்றங்களைச் செய்ய துணை செய்கிறது.
       ஆபாச படங்கள் அவர் கைகளிலேயே மிக எளிதாகக் கிடைக்கிறது.
செல் போன்களிலும் ஆபாசப் படங்கள் மாணவர்களிடையே புழங்குகின்றன. பாலியப் வக்கிரங்களுக்கு
அவர்கள் மிக இளம் வயதில், எளிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். வகுப்பறைகளிலும் செல்போன்கள்
மூலம் ஆபாசப் படங்கள் மாணவர்களின் மனதயும், மூளையையும் ஆக்கிரமித்துள்ளன. 
       திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் வன்முறை
மாணவர்களை பெரிதும் பாதிக்கவே செய்கின்றன. திரைப்படங்கள் யதார்த்தம் என்ற பெயரில் காட்டப்படும்
வன்முறைகள் மாணவர்களை பெரிதும் பாதிக்கின்றன. ரேணி குண்டா படம் சில சிறுவர்கள் கொலைகள்
செய்வது பற்றிய படமாகும். மிக இயல்பாக கொலைகளை அவர்கள் செய்வதை, யதார்த்தமாக சித்தரிக்கும்
படமாகும். சுப்ரமணியபுரம் சில வேலையற்ற இளைஞர்கள், நட்பாக, தொடர் கொலைகள், செய்வதை
மிக இயல்பாக சித்தரித்த படம். சமீபத்தில், தஞ்சையைச் சார்ந்த சில கல்லூரி மாணவர்கள்
ஒரு சிறுவனைக் கடத்தி 10 லட்சம் பிணையத் தொகையாகப் பெற்று, இறுதியில் மாட்டிக் கொண்டனர்.
அவர்கள், சொகுசு வாழ்க்கை வாழ, கடத்தியதாகவும், திரைப்படங்களைப் பார்த்து கடத்தலுக்கான
உந்துதலைப் பெற்றதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. 
       தமிழகத்தின் சாபக் கேடுகளின் ஒன்றான சாதியும்,
கல்லூரிகளில் ஒரு பெரிய அளவில் மறைமுகமாக பிரச்சினைகளுக்கு வேராக உள்ளது. கல்லூரிகளில்
நிர்வாகம், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும்
சாதிய உணர்வு,  நல்ல, கெட்ட செயல்கள் அனைத்திலும்
கோலுச்சுவதை யாரும் மறுக்க முடியாது. நிர்வாக சார்ந்த சாதி மாணவர்களுக்கு ஒரு நீதியும்
மற்றவர்களுக்கு ஒரு நீதியும் கடை பிடிக்கப்படுவதை நாம் உணரமுடியும். தென் மாவட்டங்களில்
சாதிய உணர்¨Å ஒவ்வொரு புள்ளியிலும் உணரலாம். அங்குள்ள கல்லூரிகளில் சாதிய உணர்வு சார்ந்த
செயல் பாடுகள் இருப்பது உள்ளங்கை நெல்லிக் கனி. 
       இவை போதாதற்கு நவீன கால பிரச்சினைகள் ஒவ்வொரு
குடும்பத்திலும் உள்ளன. அவைகளால் மாணவர்கள் மனதளவில் பெரும் நெருக்கடிக்குள்ளாகின்றனர்.
குடிக்கும் தந்தையுள்ள குடும்பத்தில் குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் உள்ள குழந்தைகள்,
குடும்பத்தில் அன்பை பெற இயலாத குழந்தைகள் மற்றும் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் இப்படி
பல மன நெருக்கடிகளுக்கு உள்ளான மாணவர்கள் இக்காலங்களில் பெருகி வருகின்றனர். 
       இப்போதுள்ள பிரச்சினையென்னவெனில் இம்மாதிரியான
மாணவர்களும், மற்ற மாணவர்களும்  உள்ள வகுப்புகளில்,
ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பது¾¡ý. þÐ சற்றுக் கடினமானதுதான். அவர்களும் இதே சூழலிருந்துதான்
வருகிறார்கள். யாரும் வானத்திலிருந்து குதிப்பதில்லை. அவர்கள் மேல் “ஆசிரியப் பணி,
அறப்பணி” என்ற புனிதப் போர்வையை இச்சமூகம் போர்த்தி விடுகின்றது. அவர்களால் அதை சுமக்க
முடியவில்லை. தற்போதுள்ள சூழலில் ஆசிரியர்கள், (சுய நிதி பொறியியல் கல்லூரிகளில்) அதிக
தேர்ச்சி விகிதம் தர வேண்டும் என்ற மிகப் பெரிய நெருக்கடியில் உழல்கின்றனர். வேளைப்
பளு, குறைவான ஊதியம், வேலை நிரந்தரமின்மை போன்ற பிரச்சினைகள் நிறைந்த பணிச் சூழலில்,
அவர்களுக்கும், மாணவர்களுக்கும் முரண்கள் அதிகரிக்கின்றன. 
       தமிழகத்தில் ஏறக்குறைய 550 பொறியியல் கல்லூரிகள்
உள்ளன. ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி இல்லை; 
உயர் நிலைப் பள்ளி இல்லை; மேல் நிலைப் பள்ளி இல்லை; ஆனால் பொறியியல் கல்லூரி
உள்ளது என்ற நிலையே தமிழகத்தில் உள்ளது என்றால், அது மிகையில்லை. 1985-ல் 19 பொறியியல்
கல்லூரிகள் ( அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்பட) மட்டுமே இருந்தன. வெறும்
2500 இடங்கள் மட்டுமே அப்போதிருந்தன. தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமாக இடங்கள் காலியாக
உள்ளன. 
பொறியியல்
கல்லூரிகளில் சேர்க்கை விகிதம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. சமீபகாலமாக, பெற்றோர்,
மாணவர்களிடையே பொறியியல் படிப்பு குறித்த மோகம் குறைந்துள்ளது. வேலையற்ற பொறியியல்
பட்டதாரிகள் நிறையப் பேர் தமிழகத்தில் பெருகியுள்ளனர். 100 பொறியியல் பட்டதாரிகளுக்கு
100 பேருமே வேலைக்கு தகுதியானவர்களாயிருந்தனர். தற்போது 100 பொறியியல் பட்டதாரிகளுக்கு
25 பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாய் உள்ளனர். 
இச்சூழலில்
மிகக் கடுமையான போட்டிகளுக்கிடையே, எவ்வாறாகிலும் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என
நெருக்கடியில் கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளனர். இல்லையோ கல்லூரியை மூடும் நிலை உருவாகும்.
இந்த ஆண்டு சேர்க்கை விகிதம் மிக குறைந்ததால், ஒவ்வொரு கல்லூரியிலும் 10 லிருந்து
25 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். 
சேர்க்கையை
அதிகரிக்க தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஒரு பெரிய சவாலை முதல்வர்கள்
எதிர் கொள்கின்றனர். இந்த நெருக்கடிகள் கல்லூரி முதல்வர்களின் மேல் திணிக்கப்டுகிறது.
அவர்கள் ஆசிரியர்களை தேர்ச்சிக்காக நெருக்குகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களை நெருக்குகின்றனர்.
இல்லையோ வேலை போகும் அபாயத்தில் முதல்வரும் ஆசிரியர்களும் உள்ளனர். இந்த நெருக்கடிகள்
மாணவர்கள் மேல் திணிக்கப்படுகின்றது. 
பொறியியல்
கல்லூரியில் இடங்கள் (   seats  ) மிக சுலபமாக கிடைத்து விடுகின்றது. கவர்ச்சி கர
விளம்பர உத்திகள்,  பல வித உதவித் தொகை, வங்கி
கடன் பெற்றோர்களின் ஆசைகள், இப்படி பல காரணிகளால் மாணவர்கள் விருப்பமின்றி கூட பொறியியல்
கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். மேல் நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றாலே போதும்;
நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஏதுமின்றியே ஒரு மாணவன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து
விட முடியும். 
பொறியியல்
படிப்பு இயல்பிலேயே மிக கடினமானது. மூளை உழைப்பு மிக மிக அவசியம். கணித அறிவு, ஆங்கில
அறிவு மேலும் பல் திறன்களை வேண்டி நிற்கும் படிப்பு அது. சுலமாக, அதில் நுழையும் மாணவன்
மிக பெரிய அதிர்ச்சியை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. கல்லூரிகளில் அடிப்படை வசதிக் குறைபாடுகள்,
ஆய்வக வசதிகள் இல்லாமை, அனுபவமற்ற ஆசிரியர்கள், சேவைக் குறைபாடுகள், மறைமுகக் கட்டணம்,
கட்டுமான வசதிக் குறைபாடுகள் மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன.
 பொறியியல் கல்வியின் கடினமான சவால்களும் அவனை
மிகுந்த மன நெருக்கடிகுள்ளாக்குகின்றன.  அவன், மது போன்ற கேளிக்கைகள் மற்றும் பிறவற்றால் ஆட்க்கொள்ளப்படுகின்றான். 
ஆசிரியர்கள்
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள், தினந்தோறும் தேர்வுகள், மாதத் தேர்வுகள்,
மாடல் தேர்வுகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர்.
நாமக்கல்,
திருச்செங்கோடு போன்ற பகுதிகளில்  காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை “தேர்வுகள்,
தேர்வுகள்” என கடுமையான முறையில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு
விளையாட்டு வகுப்புகள் கிடையாது. செய்முறை வகுப்புகள் கிடையாது. விடுமுறை கிடையாது.
கேளிக்கைகளுக்கு இடமே கிடையாது. இக்கல்விமுறையால் மாணவர்கள் ஒரு சிலர் அதிக மதிப்பெண்கள்
பெற்றாலும் அதனால் பலன் ஒன்றும் இல்லை என்று, உறுதியாகக் கூறமுடியும். அவர்களுக்கு
எந்தவித புரிதலும் இல்லாமல் கற்ற þìகல்வியால் பலன்¸Ùõ ஏதுமில்லை. அவர்களுக்கு உயர்
கல்விக்கான மென் திறன்கள் ( soft skills ) மிகக் குறைவாகவும் உள்ளது. மேலும் அவர்கள்
மிகவும் களைப்படைந்து ( exhausted ) போகின்றனர். இக்கல்வி வன்முறையால் மாதம் ஒரு மாணவன்
தற்கொலை செய்து கொள்கிறான், என கேள்வியுறும்போது மிகவும் அதிர்ச்சி அடைகிறோம். இôÀûÇ¢¸Ç¢ø
கல்விக் கட்டணம் லட்சத்தைத் தாண்டுகிறது. பிரச்சனை என்னவெனில், இதே மாதிரியான கல்விமுறை
சில பொறியியல் கல்லூரிகளில் பின்பற்றப் படுகின்றன. இவைகள் மாணவர்களை நடைபிணங்களாக மாற்றிவிடும்
அபாயம் உள்ளது. 
கல்லூரிகளில்
ஒழுக்க விதிகளை மிக அதிக அளவில் நடைமுறைப் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு முதல்வர்கள்
தள்ளப் படிகின்றனர். அவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள்
(  suspension and others  ) எடுக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அப்போதுதான்
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் மோதல்கள் ஆரம்பிக்கின்றன. 
காதல்
என்ற உணர்வு பெருமளவில் மாணவர்களிடையே உச்சபச்சமாக செயல்படும் காலகட்டம், அவர்களது
கல்லூரி பருவம். நம் திரைப் படங்கள் காதல் உணர்வை காசாக்குவதில் பெரிய பங்கு வகிக்ன்றன.
தமிழ் திரைப்படங்களை ஒரு பெரிய அளவில் ( broader sense) காதல் படங்கள் எனலாம், என நான்
கருதுகிறேன். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் மற்றும் விஜய் பாணி படங்கள், குடும்பப் படங்கள்,
பக்திப் படங்கள், நகைச் சுவைப் படங்கள், சமூகப் படங்கள் இப்படி எந்தவகைப் படங்களை எடுத்துக்
கொண்டாலும் காதல் மையக் இழையாகவோ அல்லது துணைக் கருவாகவோ நமது படங்களில் உள்ளது. காதலைச்
சொல்லாத படங்கள் ஏறக்குறைய இல்லை எனக் கூறிவிடலாம். 
       காதலின் மகோன்னதத்தைக் கூறும் படங்கள் நமக்கு
நிறைய உள்ளன. இவ்வகைப் படங்களில் எதை இழந்தேனும் காதலை வாழ வைத்து விடவேண்டும் என்பதுதான்
மையக் கருத்து. காதலுக்காக உயிரையே இழப்பது (பயணங்கள்
முடிவதில்லை, ஒரு தலை ராகம்), காதலுக்காக உடல் உறுப்புகளை (நாக்கையே)  இழப்பது (சொல்லாமலே),
காதலுக்காக திருமணத்தை உதறுவது (புதிய வார்ப்புகள்,
முதல் மரியாதை), காதலுக்காக மதத்தை இழப்பது ( காதலுக்கு மரியாதை, அலைகள் ஓய்வதில்லை), காதலுக்காக சாதியை இழப்பது
(வேதம் புதிது, பாரதிக் கண்ணம்மா), காதலுக்காக
காதலியை இழப்பது(!!) (ஷாஜகான்), போன்றவை
ஒரு சில உதாரணங்களாகும். 
அமீரின்
பருத்தி வீரன், பாலாஜி சக்திவேலின் காதல், வசந்தபாலனின் அங்காடித் தெரு மற்றும் சேரனின் பாரதி
கண்ணம்மா ஆகிய படங்களின் மைய இழை காதல்; இவற்றின் இயக்குனர்கள் தமிழின் முக்கிய
இயக்குனர்களாக அறியப்படுபவர்கள். இப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகும். ஞான ராஜ
சேகரனின் பாரதி படத்திற்கான விளம்பரத்தில் “ ஆதலினால் காதல் செய்வீர் மானிடரே”, என்ற
பாரதியாரின் வரியைத்தான் பயன் படுத்தியிருந்தார்கள். காதல் என்பது தமிழ் சினிமாவில்
ஒரு வெற்றிக்கான ஒரு கச்சாப் பொருள், என உறுதியாகக் கூறமுடியும். ஆனால், காதல் யதார்த்தத்தில்
வேறாயிருக்கிறது.
தெய்வீக
காதல், புனித காதல் என கனவுலகில் சஞ்சரிக்க¸¢ýÈÉ÷.  நம் கால காதலுக்கு திவ்யா - இளவரசன் காதலே சிறந்த
உதாரணமாகும். நம் இளைஞர்கள் காதலிக்க காத்திருக்கின்றனர்; காதலிக்கின்றனர்; அல்லது
காதல் தோல்வியடைந்துள்ளனர். யாதர்த்தத்தில்,  காதலின் கோரப்பிடியில் சிக்கித்
தவிக்கின்றனர். கல்வியிலிருந்து தடம் புரள்கின்றனர்.
இச்சூழலில்
தான் ஒரு முதல்வர் பணியாற்றுகின்றார். முதல்வராக ஒருவருக்கு பொறியியல் படிப்பில்  முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் கல்லூரியில் குறைந்தது  13 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ( Directorate of Technical Education - DOTE  ), சென்னை, அண்ணா பல்கலைகழகம், சென்னை, அகில இந்திய
தொழில் நுட்பக் கழகம் (  All India Council
for Technical Education - AICTE  ) , புது
தில்லி ஆகிய அமைப்புகளுக்கு கட்டுப்பட்டும், அவைகளின் விதிமுறைகளின்  கல்லூரியை நடத்த வேண்டும். 
அவர்
கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும். பொருளாதார அதிகாரத்தை, சுதந்திரத்தை
எந்த நிர்வாகமும் முதல்வர்களுக்குக் கொடுப்பதில்லை. நிர்வாகம் கூறுவதைத்தான் செய்ய
இயலும். அவர் சுதந்திரமாக செயல்படும் சூழல் இல்லையென கூறலாம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும்
அவர் பதில் கூறியாக வேண்டும். காவல் துறை, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பிற அதிகாரங்களுக்கும்
அவர் கட்டுப்பட்டாக வேண்டும். ஏறக்குறைய அவர் ஒரு சூழல் கைதியாகவே உள்ளார். 
ஆனால்
அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர் பொறுபேற்க வேண்டும். பதிலளிக்க வேண்டும். அவர் சிறு
அளவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேல் அதிகாரம் செலுத்த முடியும், எனக் கொண்டால்,
அங்குதான் அவருக்கும் மாணவர்களுக்கும் போராட்டம் வெடிக்கிறது.  அவர் போராட வேண்டும்; இல்லையோ களத்தை விட்டு வெளியேற
வேண்டும். அவர் எங்கு செல்ல முடியும்? எங்கும் இதே நிலைதான். அரசு வேலை கிடைத்தால்
அது அவரது அதிர்ஷ்டம் அல்லது கடவுள் செயல். சரி, என அவர் போராடும் போது மாணவர்கள்
அழியலாம் அல்லது அவர் அழியாலாம். அதுதான் தற்போது நடந்துள்ளது. 
நோய்க்க்கூறாக
அனைத்தும் செயல்படும் போது நாம் முதல்வரையோ மாணவரையோ குற்றப்படுத்துவதில் அர்த்தமில்லை.
நம் மாணவர்களுக்குத் தேவை ஆசிரியர்களல்ல; மன நல ஆலோசகர்களே  என்பது என் திண்ணமான எண்ணமாகும். 
 
Comments