ஆண்கள் கூட்டத்தில், அந்த ஒற்றை உடல் - ஜோசப் மரியமைக்கேல்.
ரசிகர்களின்
மனதில் நீங்கா இடம் பெற்ற அந்த
கனவுக்கன்னி
திரையில் தோன்றினாள்.
ஒரு
குறிப்பிட்ட பாடல் காட்சியில் 
தனது
உடலின் பாகங்களை காட்டி, 
கவர்ச்சிகரமான
அந்த நடனத்தை ஆடினாள்.
திரையரங்கம்
குதூகலித்து, செய்த ஆரவாரம்
அடங்க
சற்றே நேரமாகியது.
திரையரங்கில்
குழந்தைகள், சிறுவர், சிறுமியர்,
பதின்
பருவ ஆண்கள், பெண்கள் 
நடுத்தர,
வயதான ஆண்கள், பெண்கள் என
பல
தரப்பட்டவர்களும் நடனத்தை கண்டு கொண்டிருந்தனர்.
குழந்தைகள்,
சிறுவர், சிறுமியர், அக்கவர்ச்சி 
நடனத்தை
எவ்வாறு நோக்கினர்?
அவர்களின்
கவனம், தின்பண்டங்களின் 
மேலிருந்ததாக
நான் எண்ணிக் கொண்டேன்.
பதின்
பருவ பெண்கள் அவளின் அங்கங்களின்
வாளிப்பின்
மீது சற்றே பொறாமையுடன் நோக்கினர்.
இந்த
நவீன உலகில், சில பதின் பருவ பெண்கள் 
அவள்
உடலின் மேல் காதலுற்றும் இருக்கலாம்.
பதின்
பருவ ஆண்கள் வாழ்வின் ஒரு அரிய 
அனுபவமிது,
என துய்த்துணர்ந்து, அக்கவர்ச்சியில் 
புதைந்து
போயினர். 
நடுத்தர
வயது பெண்கள், சமீபத்தில் திருமணமான பெண்கள்
மற்றும்
வயதான பெண்கள் சற்று சலிப்புடன்
அந்த
கவர்ச்சியான உடலைப் பார்த்தனர்.
மேலும்,
அருகிலிருந்த தங்கள் கணவன்மாரை உற்று நோக்கினர்.
அந்த
கவர்ச்சியான தேகம் ஒரு வித அசூயையை ஏற்படுத்தியது.
வயதான
ஆண்கள், தங்கள் சாவிற்குமுன் 
இந்தவித
கவர்ச்சிகளின்மீது அதீத ஆர்வம் 
ஆர்வம்
கொண்டலைகின்றனர்.
நடுத்தர
ஆண்கள், மிகுந்த ஈடுபாட்டுடன்
அவளின்
உடலை தடவிக்கொண்டிருந்தனர், மனதில்.
அவள்
அந்தப் பாடலில் தனது 
உடலை
யாருக்காகக் காட்டினாள்,
நிச்சயமாக
அந்த கதாநாயகனுக்கில்லை.
உறுதியாக
அந்தப்பாடல் கதையோட்டத்திற்கு
அவசியம்
என இயக்குனர் கூறியிருப்பார்.
அந்த
ஆண்கள் கூட்டத்தில்,
அந்த
ஒற்றை உடல் யாவரின் 
கண்கள்
மற்றும் மனங்களில் 
வியாபித்துக்
கிடந்தது. 
 
Comments