பெண் மருத்துவரின் அந்த செயல் - ஜோசப் மரியமைக்கேல்.
அவனுக்கு இரண்டு நாள்களாக பல் வலி. மிகுந்த அவதியுற்றான். நகரில் இருந்த பல் மருத்துவரைப் போய் பார்த்தான். அவள் அவனை கனிவுடன் விசாரித்தாள். அவனது நோயைப் பற்றி பல கேள்விகள் கேட்டாள். ஒல்லியான தேகம். வயது முப்பதிற்குள் இருக்கலாம். 
 அறைக்கு வெளியே, அவளது கணவன், அவளின் ஒரு வயது குழந்தை, அவளின் தந்தை ஆகியோர், பேசிக் கொண்டும், குழந்தையுடன் விளையாடிக் கொண்டுமிருந்தனர். 
 அவள், அவன் பற்களை பரிசோதிக்க, அடுத்த அறையில் உள்ள சாய்வு நாற்காலியில், தலை சாய்த்து அமரச் செய்தாள். வாயைத் திற்க்கச் சொன்னாள். அருகில் வந்து உற்றுப் பார்த்தாள். பற்களை பார்த்துக் கொண்டே வந்தாள். மிக மிக அருகில் நெருங்கி வந்தாள். நாற்காலியின் கைப்பிடியில் அவனது கை  இருந்தது. அவள் நெருங்கி பரிசோதிக்கயில், அவளது மார்புகள், அவன் மேல் அழுந்தின. அவன் சட்டென கைகளை உள்ளிழுத்துக் கொண்டான்.
 அவள் பரிசோதனையை முடித்துவிட்ட பின்பு, அறையில் அமர சொன்னாள்.
அவன், அவளிடம், தனது பற்கள் பற்றிக் கேட்டான். அவள் ஏனோ சுரத்தில்லாமல் பதில் கூறினாள். சீழ் பிடித்துவிட்டதாகக் கூறினாள். முன்பு அவளிடம் காணப்பட்ட அந்த ஆர்வமும், கனிவும் காணாமல் போயிருந்தன. அவன் சற்றுக் குழம்பினான். என்ன நடந்தது? திரும்ப வரவேண்டுமா? அவன் கேட்டதற்கு அவள், வேண்டாமென மறுத்தாள். 
அவன் வெளியேறினான்.
 அவள் கணவனும், தந்தையும் சிரித்தவாறே, அந்த குழந்தையிடம், ‘டாடா’ கூறச் சொன்னார்கள். கபடில்லா அக்குழந்தை ‘டாடா’ சொல்லி சிரித்து வழியனுப்பியது. 
 
Comments