“வரும், ஆனா வராது” டீச்சர் - ஜோசப் மரியமைக்கேல்
      ஒரு
அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் ஜெயா. மாணவர்கள் அவருக்கு சூட்டிய
செல்லப் பெயர், “வரும், ஆனா வராது”, டீச்சர். அவர் பள்ளிக்கு வருவார், ஆனால் வகுப்பிற்கு
வரமாட்டார். அதனால்தான் அப்பெயர். லேட்டாகத்தான் பள்ளிக்கு வருவார், சீக்கிரம் வீட்டிற்கு
கிளம்பி விடுவார். காலை சிற்றுண்டி பள்ளியில்தான் சாப்பிடுவார். மதியம் சாப்பிட்டுவிட்டு
ஒரு நல்ல உறக்கம் போடுவார். 
      யாரும்
எதுவும் கேட்க முடியாது. மிக கேவலமாக சண்டையிடுவார். கோள் மூட்டுவார். புறணி பேசுவார்.
பிறரது நடத்தையை தவறாக திரித்து விடுவார். தலைமையாசிரியர்கள் ஒதுங்கிப் போவர் அல்லது
அவரது கட்டுபாட்டிற்குள் இருப்பர். 
      பத்தாம்
வகுப்பிற்கு காலாண்டுத் தேர்விற்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். இன்னும் இவர்
பல பாடங்களை நடத்தியே முடிக்கவில்லை. வகுப்பிற்குச் சென்றால், “எல்லாரும் படிங்கடா”,
என சுற்றி, சுற்றி வருவார். சிலரை திட்டுவார். யாரிடமாவது செல்லில் பேசிக் கொண்டிருப்பார்.
அன்றும் அப்படியே. 
      மாலை
வீட்டிற்குச் சென்றார். தனியார் பள்ளியில் பயிலும் அவரது மகன், மிகக் கவலையோடு புலம்பிக்
கொண்டிருந்தான். “அவனது ஆசிரியர் பாடங்களை சரியாக நடத்தவில்லை, சந்தேகம் கேட்டால் மிகவும்
கேவலமாகத் திட்டுகிறார். சரியாகவும் வகுப்பிற்கு வருவதில்லை, வந்தாலும் வாட்ஸஅப்பில்
மூழ்கிவிடுகிறார்”, என அவன் அரற்றுவது ஜெயா காதில் ஈட்டியாய் இறங்கிற்று. 
      
 
Comments