Posts

Showing posts from November, 2023

Sri Devi, A Star of Innocence - Joseph Mariamichael

       From my memories, when I was 4th Standard, I think, "16 Vayathinile" (At the age 16), was the first cinema, I saw, Sri Devi's. My father came running with handful of coins and informed us that we should get ready at once to go for a cinema "16 Vayathinile". My sister, aged around one year, sleeping on the cradle, jumped out of the cradle, on hearing the sudden surprise news ( as moving going moments were the happiest moments in those times), luckily into my hands. Every body hurriedly got ready and rushed to the movie Hall. After watching the movie, though I again and again recited dialogues of Kamal and Rajini in the Movie, I could not recognize much Sri Devi.  When I was doing +1 only, I came to know the name Sri Devi and got much impressed on seeing her screen presence in Santhippu (Junction) a Sivaji Ganesan movie, a modified version of his own old cinema Thrisoolam (Thrisul). By the time she was leaving the Tamil Cinema and started acting in Hindi Ci...

“வரும், ஆனா வராது” டீச்சர் - ஜோசப் மரியமைக்கேல்

        ஒரு அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் ஜெயா. மாணவர்கள் அவருக்கு சூட்டிய செல்லப் பெயர், “வரும், ஆனா வராது”, டீச்சர். அவர் பள்ளிக்கு வருவார், ஆனால் வகுப்பிற்கு வரமாட்டார். அதனால்தான் அப்பெயர். லேட்டாகத்தான் பள்ளிக்கு வருவார், சீக்கிரம் வீட்டிற்கு கிளம்பி விடுவார். காலை சிற்றுண்டி பள்ளியில்தான் சாப்பிடுவார். மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல உறக்கம் போடுவார்.       யாரும் எதுவும் கேட்க முடியாது. மிக கேவலமாக சண்டையிடுவார். கோள் மூட்டுவார். புறணி பேசுவார். பிறரது நடத்தையை தவறாக திரித்து விடுவார். தலைமையாசிரியர்கள் ஒதுங்கிப் போவர் அல்லது அவரது கட்டுபாட்டிற்குள் இருப்பர்.       பத்தாம் வகுப்பிற்கு காலாண்டுத் தேர்விற்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். இன்னும் இவர் பல பாடங்களை நடத்தியே முடிக்கவில்லை. வகுப்பிற்குச் சென்றால், “எல்லாரும் படிங்கடா”, என சுற்றி, சுற்றி வருவார். சிலரை திட்டுவார். யாரிடமாவது செல்லில் பேசிக் கொண்டிருப்பார். அன்றும் அப்படியே.       மால...

ஆண்கள் கூட்டத்தில், அந்த ஒற்றை உடல் - ஜோசப் மரியமைக்கேல்.

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற அந்த கனவுக்கன்னி திரையில் தோன்றினாள். ஒரு குறிப்பிட்ட பாடல் காட்சியில் தனது உடலின் பாகங்களை காட்டி, கவர்ச்சிகரமான அந்த நடனத்தை ஆடினாள். திரையரங்கம் குதூகலித்து, செய்த ஆரவாரம் அடங்க சற்றே நேரமாகியது.   திரையரங்கில் குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பதின் பருவ ஆண்கள், பெண்கள் நடுத்தர, வயதான ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்டவர்களும் நடனத்தை கண்டு கொண்டிருந்தனர்.   குழந்தைகள், சிறுவர், சிறுமியர், அக்கவர்ச்சி நடனத்தை எவ்வாறு நோக்கினர்? அவர்களின் கவனம், தின்பண்டங்களின் மேலிருந்ததாக நான் எண்ணிக் கொண்டேன்.   பதின் பருவ பெண்கள் அவளின் அங்கங்களின் வாளிப்பின் மீது சற்றே பொறாமையுடன் நோக்கினர். இந்த நவீன உலகில், சில பதின் பருவ பெண்கள் அவள் உடலின் மேல் காதலுற்றும் இருக்கலாம்.   பதின் பருவ ஆண்கள் வாழ்வின் ஒரு அரிய அனுபவமிது, என துய்த்துணர்ந்து, அக்கவர்ச்சியில் புதைந்து போயினர்.   நடுத்தர வயது பெண்கள், சமீபத்தில் திருமணமான பெண்கள் மற்றும் வயதான பெண்கள் சற்று சலிப்புடன் அந்த கவர்ச்சியான உடல...

மனைவியின் காதலன் - ஜோசப் மரியமைக்கேல்.

அவன் அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தான். அறுபது வயதாகிறது. உடல் நலம் தேறினாலும், முன்பு போல் அவனால் நடமாட முடியாது. அவனது பழைய உடல் அவனுக்கு கிடைப்பதரிது. உயிரோடு இருக்கலாம் என்பதைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.   அவளுக்கு ஏனோ, அவன் மீது பச்சாதாபமாய் இருந்தது. அவனுடன் 25 வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டாள். பையன் குடும்பத்துடன் வெளி நாட்டில் வசிக்கிறான். அவர்கள் குடும்பங்கள் ஒரளவிற்கு பிரச்சினையின்றி ஓடுகின்றன. அவள் கணவன் மிகவும் நல்லவன். கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லை.  அவன் அவளின் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டவனாயிருந்தான். ஒரு மனைவிக்கு உண்டான அனைத்து நல்ல குணங்களையும் கொண்டவள், எனவும், அவள், அவனுக்கு வாய்த்தது, கடவுள் தந்த வரம் என்றும் நம்பினான். அவ்வவ்போது, அவனது நண்பர்களிடமும் கூறுவான்.  அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியே. இருந்தாலும் அவளுக்கு, அவனை நாம் ஏமாற்றுகிறோம் என்பது, உறுத்தலாயிருந்தது. ஏறக்குறைய 20 வருடங்கள் அவனை ஏமாற்றி வருகிறாள். அவளுக்கு பல நியாயமான காரணங்கள் இருக்கவே செய்தன. ஏனோ மனம் சற்று குற்ற உணர...

பெண் மருத்துவரின் அந்த செயல் - ஜோசப் மரியமைக்கேல்.

அவனுக்கு இரண்டு நாள்களாக பல் வலி. மிகுந்த அவதியுற்றான். நகரில் இருந்த பல் மருத்துவரைப் போய் பார்த்தான். அவள் அவனை கனிவுடன் விசாரித்தாள். அவனது நோயைப் பற்றி பல கேள்விகள் கேட்டாள். ஒல்லியான தேகம். வயது முப்பதிற்குள் இருக்கலாம்.   அறைக்கு வெளியே, அவளது கணவன், அவளின் ஒரு வயது குழந்தை, அவளின் தந்தை ஆகியோர், பேசிக் கொண்டும், குழந்தையுடன் விளையாடிக் கொண்டுமிருந்தனர்.   அவள், அவன் பற்களை பரிசோதிக்க, அடுத்த அறையில் உள்ள சாய்வு நாற்காலியில், தலை சாய்த்து அமரச் செய்தாள். வாயைத் திற்க்கச் சொன்னாள். அருகில் வந்து உற்றுப் பார்த்தாள். பற்களை பார்த்துக் கொண்டே வந்தாள். மிக மிக அருகில் நெருங்கி வந்தாள். நாற்காலியின் கைப்பிடியில் அவனது கை இருந்தது. அவள் நெருங்கி பரிசோதிக்கயில், அவளது மார்புகள், அவன் மேல் அழுந்தின. அவன் சட்டென கைகளை உள்ளிழுத்துக் கொண்டான்.  அவள் பரிசோதனையை முடித்துவிட்ட பின்பு, அறையில் அமர சொன்னாள். அவன், அவளிடம், தனது பற்கள் பற்றிக் கேட்டான். அவள் ஏனோ சுரத்தில்லாமல் பதில் கூறினாள். சீழ் பிடித்துவிட்டதாகக் கூறினாள். முன்பு அவளிடம் காணப்பட்ட அந்த ஆர்வமும், கனிவ...