துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்
 
  துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா?   அல்லது   சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்?                          ம.ஜோசப்   பொதுவாக துப்பறியும் நாவல்கள், நாவல் வாசகர்கள் மத்தியில் கோலோச்சுகிறது என்றால் மிகையில்லை. இப்போதும், எப்போதும் துப்பறியும் நாவல்களுக்கு வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றின் விற்பனையும் அதிகம். பரபரப்பு, திகில், விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள் போன்ற வெகுசன நாவலின் கூறுகள் நிறைந்து காணப்படுபவை துப்பறியும் நாவல்கள். அதனால்தான் பெருவாரியான வாசகர்களால் அவை படிக்கப்படுகின்றன. தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும், இறுதியில் தர்மம் எப்படியும் ஜெயித்துவிடும், என்பதுதான் இந்நாவல்களின் மையக் கருத்து. திரைப் படங்களிலும் துப்பறியும் கதைகள் வெற்றிகரமாக கையாளப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் நடித்த வெற்றிப் படமான இதயக்கனி  மற்றும் நூறாவது நாள்  உட்பட பலத் திரைப்படங்கள் இவ்வகையில் எடுக்கப்பட்டுள்ளன.   ஆரம்ப கால துப்பறியும் நாவலாசிரியர் ஜே.ஆர். ரங்கராஜுவின்...
