Novel - Chapter 4



பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன

4

அலமேலு தனித்திருந்தாள். மருத்துக் கல்லூரிப் பகுதியில் உள்ள அவர்கள் வீட்டில் தனியே இருந்தாள். அவளின் பயங்களை யாரும் அறியா வண்ணம் பூட்டிக் கொண்டாள். காலம் அவள் மேல் பெரும் இருட்டைப் போர்த்த ஆரம்பித்து விட்டது போல் உணர்ந்தாள். மனதில் அடியாழத்தில் பூனை பிராண்டுவதைப் போல் சத்தம் கேட்டது. அடிக்கடி, தனியே இருக்கும் போது இது மாதிரியான சப்தங்கள் கேட்கின்றன.
அவள் குழந்தைகளுடன் சிரித்தாள்; அவர்களின் விளையாட்டுக்களை விளையாடினாள்; அவர்களின் தொலைக் காட்சிகளைப் பார்த்தாள்; சில நேரங்களில் குடும்பக் கவலைகளில் மூழ்கிப் போனாள். இருந்தும் பிராண்டல்களில் மெல்லிய அதிர்வுகள், அவளின் கால்களைப் பற்ற ஆரம்பித்தன. அவளின் இதயத்தைப் பற்றிக் கொண்ட, அந்தக் கொடியவனை விரட்ட, அவளின் கணவனும் அங்கிருக்கவில்லை. தனிமையாய் இருக்கும் போது பூனை புலியாகும் சாத்தியங்கள் அதிகரித்தன.
சுப்ரணியன் வீட்டிற்கு வந்தான். வீடு திறந்து கிடந்தது. அம்மா உள்ளே படுத்திருந்தாள். மனைவியைக் காணவில்லை. வெளிச்சமில்லாமல் மெல்லிய இருள் அறைகளில் பரவியிருந்தது. அவன் கலவரமடைந்தான். மங்கை, மங்கை என கத்தினான். ஏதும் பதில்லை. அம்மா பதட்டத்துடன் எழுந்து வந்தாள். மங்கை பக்கத்து வீட்டிற்கு சென்று, சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டாள்.
சத்தம் கேட்டு, வந்த மங்கை என்ன? என கேட்பதற்குள், அவன் மிகுந்த கோபத்துடன் கத்தி தீர்த்து விட்டான். அம்மாவை தனியா விட்டுட்டுப் போகாதேனு எத்தனெ தடவ சொல்லறது?, என குதித்தான். அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. மங்கை சமையலைறயில் புகுந்து கொண்டாள், மொன, மொன வென திட்டிக் கொண்டிருந்தாள். கோபத்துடன் சாப்பிடாமல் வெளியேறினான் சுப்ரமணியன்.
அம்மா ஒன்றும் புரியாமல் கலங்கிய கண்களுடன், பேச திராணியற்றுப் போய் படுத்துக் கொண்டாள். இதற்கு ஏன் இவ்வளவு கோபப்படுகிறான்? இப்போதெல்லாம் பெரியவன் அதிகம் கோபப்படுகிறான்? சின்னவனும் மகிழ்ச்சியாயில்லை? என்ன நடக்கிறது இந்த வீட்டில்? நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? என எண்ணியபடி தூங்கிவிட்டாள்.
அவள் ஆழ்ந்து உறங்கிப் போனாள். அப்போது ஒரு கனவு வந்தது? ஒரு எருமை மாட்டின் மேல் அவள் ஏறிவருவது போல் ஒரு காட்சி; அவ்வளவுதான். அவள் பதட்டத்துடன் எழுந்துவிட்டாள். எருமை மாடு எமனின் வாகனம் என்பார்களே? அய்யோ, என கலங்கிப் போனாள். யாரிடமும் சொல்லவில்லை. யாரிடம் சொல்வது? யாரைப் பயமுறுத்துவது?
அப்போது சுப்ரமணி, அகில் மற்றும் சுப்ரமணியனினுடன் பணி புரியும் டாக்டர். மைக்கேல் வந்தனர். அவர்கள் பொதுவாகப் சில விஷயங்களைப் பேசிகொண்டிருந்தனர். என்றாலும் அகிலும், சுப்ரமணியனும் பதட்டமாகக் காணப்பட்டனர். மைக்கேல் மட்டும் பதட்டமில்லாமல், எல்லோரிடமும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
அம்மாவை அறிமுகப்படுத்தினர். அவளுக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினார். கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட வேண்டுமெனக் கூறினார். துயரங்களை நாம் கடந்துதான் போக வேண்டும்.
குழந்தைகளிடம் ஜாலியாகப் பேசினார். வீடு சற்று கலகலப்பாகியது. டி.வி.யை போட்டார். அப்பாவின் மரணத்திற்குப் பின் இப்போதுதான் டி.வி.யே போடுகிறார்கள். எல்லோருக்குள்ளும் மாற்றத்தின் அலை  பரவியது. அவருக்கும் எப்படி ஆறுதல் சொல்லுவதென்று தெரியவில்லை. ஆனால், இந்த துயர அடுக்கை கடந்து அடுத்த நிலைக்கு போக வேண்டுமென அவர் நினைப்பதாக, செயல்படுவதாக, அவரது செயல்கள் அமைந்திருந்தன. அதை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
நாளைக்கு சுப்ரமணியிடம் விரிவாகப் பேசுவதாகக் கூறினார். முடிந்தால் அகிலும் கூட வரும்படிக் கூறி, எல்லோரிடமும் விடைபெற்றுச் சென்றார். அம்மா சற்று ஆசுவாசமடைந்தாள். அனைவரும் அன்று உணவருந்திவிட்டு அமைதியாக உறங்கினர்.
அடுத்த நாள் சுப்ரமணியனும், அகிலும் டாக்டர்.மைக்கேலை, கல்லூரியில் அவரது அறையில் சந்தித்தனர். கல்லூரி விடுமுறையாதலால் அதிக நடமாட்டம் இல்லை. ஆங்காங்கே ஒரு சில மாணவர்கள் தென்பட்டனர். சிலர் கணினி மையங்களில் வேலையாயிருந்தனர்.
டாக்டர். மைக்கேல் சுப்ரமணியிடம், அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்தார். இரண்டு கடிதங்களையும் படித்தறிந்து கொண்டார். ஏன் இன்னும் போலிசுக்கு போகவில்லை? அகிலுக்கு இன்னும் மூன்று மாதத்தில் கல்யாணம். இப்பப் போய் போலிஸ், விசாரணை, அது, இது என்றால் வீணாக சிக்கல் வரும், போலிஸ் என்றால் பயம் வேறு? அவர்கள் என்ன செய்து விடப்போகிறார்கள்? வீணான அலைச்சல்.
அப்படி இல்லை. நாம் போலிஸிற்குப் போய்த்தான் ஆக வேண்டும். இது மிகவும் சிரியஸா டீல் பண்ண வேண்டியது என, நான் நினைக்கிறேன்.
அப்பா ஏன் கொலை செய்யப்பட்டாருன்னு நெனைக்கிறே, அகில், என்றார்.
அப்பாவிற்கு சுகர், ஹை பிரஷர். அவருக்கு சில அதிர்ச்சியான விஷயங்களை சொன்னாலே பிரஷர் ஏறிடும். அவர் சில பயங்கரங்களை எதிர் கொண்டாலே ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஹை பிரஷர் உள்ளவங்க அதிகமான வெயிலில் நடந்து போனாலே சன் ஸ்ட்ரோக்கில இறக்க வாய்ப்பு இருக்கு, என்றான். அன்றிரவு அவர் சரியாக உறங்கவில்லை. மிக பதட்டமாகத்தான் இருந்தது போலிருந்தது. எப்போதும் போல்தான் என,  நாங்க  கவனக் குறைவாக விட்டு விட்டோம்.
அப்படி இருக்க வாய்ப்புகள் அதிகம். உறிதியாக அவர் கொல்லப்பட்டிருகிறார். என்பதற்கு ஒரு ஆதாரம், அவர் சட்டப்பையில் உள்ள கடிதம். அது, அந்த கொலைகாரனால்தான் வைக்கப்பட்டிருக்கும். அவன் கொலைகளை செய்யத் திட்டமிட்டுள்ளான். ஒரு சில காரணங்களுக்காக முன் கூட்டியே, உங்களுக்கு தெரியப்படுத்துகிறான். நீங்கள் பயப்பட வேண்டும், பதட்டப்பட வேண்டும், என நினைக்கிறான்.
உங்கள் குடும்பத்தின் மேல் ஒரு தீராத பகை உள்ளது. கோபம் உள்ளது, கொலை வெறி உள்ளது. மேலும் ஒரு முக்கியமான விஷயம் உங்கள் குடும்பம் கண்காணிக்கப்படுகிறது. உங்கள் பின்னால் தீவிரமான ஒரு நிழல் எப்போதும் விழுந்து கொண்டேயிருக்கிறது. அவர்கள் மிகவும் பயந்து போயினர். காலைச் சுற்றின பாம்பு கடிக்காம விடாது, என்பார்கள்.

அவன் யார்? ஏன் எங்களை கொல்ல வேண்டும்? அவனைக் கண்டுபிடிக்க நம்மிடம் உள்ளது இரு கடிதங்கள் மட்டுமே. அவையும் நன்கு தெளிவாக கணினியில் டைப் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து அவனைக் கண்டுபிடிக்க முடியுமா? தஞ்சாவூரில் இதை யார் டைப் செய்தது என எப்படிக் கண்டு பிடிப்பது? இல்லை ஒரு வேளை அவனே டைப் செய்திருக்கலாம். இது ஒன்றுதான் அவனைப் பற்றித் தெரிகிறது, என்றான் அகில்
கரக்ட். மேலும் அவன் சாதியால் மிகவும் பாதிக்கப்பட்டவன். சாதி மேல் தீராத கொலை வெறி அவனிடம் உள்ளது. அப்படியெனில் அவன் சாதியால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சாதி ஒரு கொடூர மிருகம் போன்றது. மிருகத்தால் அழிக்கப்பட்டவர்களில் அவனது குடும்பமோ அல்லது அவனோ இருக்கலாம். இது பற்றி உங்க அம்மாவிடம் கேட்டு ஏதாவது க்ளு கிடைக்கிறதாவெனப் பாருங்கள் என்றார், டாக்டர். மைகேல்.
நாம் இனி மிக கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை நம்பிக்கையானவர்கள் மூலம் பள்ளிக்குக் கொண்டு சென்று, கூட்டி வர வேண்டும். இம்மி பிசகினாலும் துன்பம்தான். அம்மா, மங்கை இருவருக்கும் பாதுகாப்புத் தேவை. நீங்களும் கவனமாக இருக்க வேண்டும்.
பின்பு மூவரும் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அங்கு ஒரு கான்ஸ்டபிள் இருந்தார். அம்மா (எஸ்.ஐ) இன்று கலெக்டர் மீட்டிங்கிற்கு போயிருக்காங்க, ஏட்டு வருவாரு, அவரிடம் சொல்லுங்க. என்றார். வெளியே மரத்தடியில் காத்திருந்தனர். என்னய்யா என்ற படியே ஏட்டு வந்தார். சினிமாக்களில் வருவது போலிருந்தார்.
அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு, விபரங்களைக் கூறினர். சரி சார். ஒரு கம்ளைய்ண்ட் எழுதிக் கொடுங்க. என்றார். அதைப் பதிவு செய்து ஒரு ரிசிப்ட் கொடுத்தார். அந்தக் கடிதங்களின் நகல்களை வாங்கிக் கொண்டார். அது எப்.ஐ.ஆருக்கான ரசீது. அம்மா வந்தவுடன் சொல்றேன் என்றார். வேணா நாளைக்கு வந்து அம்மாவைப் பாத்துட்டுப் போங்க, என்றார்.
அவர்கள் வெளியே வந்தனர். சார், கவர்மெண்ட்னால கரப்ஷன்தான், இவனுகளை நம்பி ஒரு புண்ணியமில்லை. நீங்க கொஞ்சம் ப்ளிஸ், உதவி செய்யுங்க. சுப்ரமணி, என்னோட ஸ்டுடண்டோட அப்பாதான் டி.எஸ்,பி யாக இருக்கிறார். அவர் எனக்குக் கொஞ்சம் பழக்கம். நா அவரிட்ட பேசிப் பார்க்கிறேன்.
அனைவரும் கிளம்பினர். அகிலும், அண்ணனும் வண்டியில் கிளம்பினர். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவனின் அடுத்துக் குறி யாராக இருக்கும்? அண்ணனா? அண்ணியா? குழந்தைகளா? இல்லை நானா? 

Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்