Who murdered the Wife?
    “அவர் கால் தூசிக்கு நீ சமமாக மாட்டாய்”   ம.ஜோசப்     கொடைக்கானலில் அந்தக் கொலை நடந்துள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்களில் அந்தப் பெண் மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளாள். அவள் இரு குழந்தைகளுக்குத் தாய். சொந்த ஊர் மதுரை. அவள் கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் எழுத்தராகப் பணி செய்கிறார்.   கொடைக்கானல் காவல் நிலையத்திலிருந்து எஸ்.ஐ.யும் இரு காவலர்களும் அங்கு விரைந்தனர். இரு குழந்தைகளும், அவள் கணவனும் கவலையுடனும், பதட்டத்துடனும் நின்றிருந்தனர். அங்கு ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது.   எஸ்.ஐ., பாடி எங்கே? என்றார். ஒதுக்குப்புறமான ஒரு இடத்தைக் அந்தக் கணவன் காட்டினார். அங்கே சென்ற அவர், அதிர்ந்தவராய், அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தார். குப்புற படுத்திருந்தாள். தலையின் பின் புறத்தில் ரத்தம் நிறைய வழிந்தோடி கழுத்திலும், தரையிலும் பரவியிருந்தது. அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேயிருந்தது. அருகில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதிலும் ரத்தம் பரவியிருந்தது. பின்புறமாய் யாரோ கல்லால் தாக்கியிருக்க வேண்டும். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்து, உயிர் போயிருக்கக் கூடும். சலேத்து மாதா கோவிலின் சற்று ஒதுக்குப்பு...