Posts

Showing posts from 2015

பாப நாசம் தரும் பாவமான படிப்பினை.

Image
பாப நாசம் தரும் பாவமான படிப்பினை                                                                     ம.ஜோசப். ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல் ஹாசனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் திரைப்படம் பாப நாசம் (2015). ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளி வந்த திர்ஷ்யம் என்ற படத்தின் தமிழ் வடிவம் (ரீமேக்). தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான படமும் கூட. பத்திரிக்கைகள், விமரிசகர்கள், திரைப்பட ஆர்வலர்கள், டிஜிட்டல் ஊடகங்கள், இப்படி அனைவரால் சிலாகிக்கப்படும் படம் தான் பாபநாசம். மிகவும் புத்திசாலித்தனத்துடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, கமல் ஹாசனின் அற்புதமான நடிப்பு, நவீன காலத்தின் மிக முக்கியான பிரச்சினையைப் சொல்லும் கதை, சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ள கலா பவன் மனி, ஆஷா சரத், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பிற கதா பாத்திரங்கள், எழுத்தாளர் ஜெய மோகனின் வசனம் இப்படி பல ஆகச் சிறந்தவைகளுடன் திரையர...

கருப்பு சாம்ராஜ்யம் - ஜோசப் மரியமைக்கேல்

சோழமண்டலக் கடற்கையில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அவன் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன் பாண்டிய நாட்டு பிரஜை. பாண்டிய நாட்டில் தற்போது உருவாகி வரும், சுதந்திர தாகம் கொண்ட குழுக்கள் ஒன்றில் அவன் இருந்து வந்தான். அவன் தாய்நாடு விடுதலை அடைய வேண்டும் என வேகம் கொண்டவன். பல காலமாக பாண்டியர்கள், சோழர்களின் அடிமையாகவே வாழ்ந்து வந்தனர். பாண்டிய மன்னனோ நாடிழந்து காடுகளில் சுற்றி அலைகிறான். பிரஜைகளோ அடிமை சேவகம் புரிந்து வருகின்றனர். தம் மக்கள் படும் துயரத்தை காண சகியாமல் கோபமுற்ற அவனை, விடுதலை வேட்கை குழுவில், ஒரு துறவி சேர்த்து விட்டிருந்தார். அங்கு போர்ப் பயிற்சிகள் செய்து வந்தனர்.அது ஏறக்குறைய ஒரு சாவேற்றுப் படையாகும். சிறு சிறு குழுக்களாக அந்த விடுதலை வேட்கை குழுக்கள் இயங்கி வந்தனர். அவன் அந்த குழு தலைவனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினான். தலைவனின் பதில்கள் திருப்தியை தரவில்லை. குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி ஒரு வணிகர் போல் வேடம் தரித்து சோழ நாட்டிற்கு வந்தான். அவன் தலைமறைவாக வாழ்ந்த அந்த வாழ்வை வெறுத்தான். சோழநாடு வளமுடையது என்கிறார்கள். அதனைப் பார்க்கலாம், மேலும், இருண்ட வ...

ஆடு காணாமல் போய்விட்டது - ஜோசப் மரியமைக்கேல்

ஆடு காணாமல் போய் விட்டது. அது ஒரு குடியானவனின் ஆடு. அந்த குடியானவன் ஊர் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டான். முந்தின இரவில்தான் அது காணவில்லை. அவன் மிகவும் கலவரமும், கவலையும் அடைந்திருந்தான். தலைவர் கண்டுபிடித்து தருவதாகவும், திருடனுக்கு தக்க தண்டனை வழங்குவதாகவும் கூறினார். அந்த ஊர் குப்பனும் மிகவும் கலவரத்துடன் காணப்பட்டான். அவன் மனைவியிடமும், குழந்தைகளிடமும் சரியாக பேசவில்லை. சாப்பாட்டிற்கு மிக நீண்ட நாள்களுக்கு அப்புறம் பொருட்களை வாங்கி வந்திருந்தான். அது சம்பந்தமாக அவன் மனைவி கேட்ட கேள்விகளுக்கு, எரிச்சலும், கோபமும் அடைந்தான். மிகவும் பதட்டத்துடனே காரியங்களை செய்தான். ஆட்டைத் தொலைத்த குடியானவன் வருத்தமும், கோபமும் அடைந்தான். அவனும், அவன் மனைவியும். அய்யனாரிடம் போய் காசு வெட்டிப் போட்டார்கள். 'சக்தி வாய்ந்த அய்யனார்', உடனே கேட்கும் சாமி', என ஊரில் நம்பிக்கை இருந்து வந்தது. ஆடு திருடியவனுக்கு ஏதேனும் கெடுதல் நடக்கும். ஒரு வேளை செத்துக்கூடப் போகலாம். ருவெல்லாம் கத்தி,திட்டியபடியே வந்தனர். அவனின் மைத்துனன், அவ்வூர்க்காரன், விஷயம் தெரிந்ததும், வருத்தப்பட்டான். எப்படியும் திர...

Oh, Kadthal Kanmani, A Review.

Image
Oh, Kadthal Kanmani M.Joseph, Film Researcher. Oh, Kadthal Kanmani, a recent addition to the filmography of veteran cinema director Mani Ratnam,  touches upon the ultra modern life style, “Live –in Together” , which is a modernized  version of his own cinema Mohan – Revathi starring “Mouna Ragam”, with some latest toppings. The energetic, charming, bubbly lovers  (Dulquer salmaan and Nithya Menon) spend most of the time, laughing and  playing around. They are either involved in fun making or love making, probably, which is what all about the Live-in  Together, the director intends to convey the audience. The "Live –in Together" duo finally agree to get married for sake of support and care which will be needed at their old age, is the story line of the Oh, Kadthal Kanmani .  It deals with a very important issue of our life time Live-in Together, which our culture encounters recent times, in a very light hearted manner. It neither deeply re...

தமிழ் சினிமாவில் காதல் மற்றும் சாதி

தமிழ் சினிமாவில் காதல் மற்றும் சாதி எம்.ஜோசப் “காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."                                                                                         பாரதியார். அமீரின் பருத்தி வீரன், பாலாஜி சக்திவேலின் காதல், வசந்தபாலனின் அங்காடித் தெரு மற்றும் சேரனின் பாரதி கண்ணம்மா ஆகிய படங்களைப்பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. இப்படங்களை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்? என்பதை பின்பு பார்க்கலாம். அதற்குமுன் ஒரு வசதிக்காக, இப்படங்களின் கதை சுருக்கங்கள் கீழே தரப்படுகின்றன:  காதல்  ...