பாப நாசம் தரும் பாவமான படிப்பினை.
பாப நாசம் தரும் பாவமான படிப்பினை
                                                                    ம.ஜோசப்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல் ஹாசனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் திரைப்படம் பாப நாசம் (2015). ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளி வந்த திர்ஷ்யம் என்ற படத்தின் தமிழ் வடிவம் (ரீமேக்). தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான படமும் கூட.
பத்திரிக்கைகள், விமரிசகர்கள், திரைப்பட ஆர்வலர்கள், டிஜிட்டல் ஊடகங்கள், இப்படி அனைவரால் சிலாகிக்கப்படும் படம் தான் பாபநாசம். மிகவும் புத்திசாலித்தனத்துடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, கமல் ஹாசனின் அற்புதமான நடிப்பு, நவீன காலத்தின் மிக முக்கியான பிரச்சினையைப் சொல்லும் கதை, சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ள கலா பவன் மனி, ஆஷா சரத், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பிற கதா பாத்திரங்கள், எழுத்தாளர் ஜெய மோகனின் வசனம் இப்படி பல ஆகச் சிறந்தவைகளுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் பாப நாசம். திரையரங்குகளில் மக்கள் வெள்ளம்.
ஒரு சாமனியனின் (சுயம்பு லிங்கம் - கமலின் கதாபாத்திரம் ) குடும்பத்தில் நடக்கும் ஒரு அசம்பாவிதத்தை, எவ்வாறு அவன் எதிர்கொண்டு, அக்குடும்பத்தை காப்பாற்றுகிறான், என்பதுதான் கரு.
சந்தர்ப்ப வசத்தால், குடும்பதிற்குள் நுழையும் ஒரு தீயவன், அவனது பெண் குழந்தையை பாலியல் வன்முறை செய்ய முயலும் போது, அவளால் கொலை செய்யப்படுகிறான். அவன் அதிகாரமும் செல்வாக்கும் படைத்த காவல் துறை பெண் உயரதிகாரியின் மகன். குடும்பத்தை மிகவும் நேசிக்கும் சுயம்புலிங்கம், அக்குடும்பத்தைக் காக்க, அதிகாரத்தை எதிர்கொள்கிறான். அதில் வெற்றியும் அடைகிறான்.
ஒரு சாமனியன் தனக்கு நேரும் ஒரு தீமையை எவ்வாறு எதிர் கொள்கிறான்? அவனது உபாயங்கள், தந்திரங்கள் எத்தன்மையது? அவைகள் தீமையானவையா? அல்லது நன்மையானவையா? என்பதுவும், முக்கியமென்றே நான் கருதுகிறேன்.
படத்தின் முக்கிய பாத்திரமான சுயம்புலிங்கம் நல்லவன். ஆபத்திலிருப்பருக்கு உதவுபவன். நல்ல விஷயங்களைப் பிறருக்கு எடுத்துரைப்பவன். சக மனிதர்களிடம் நன் மதிப்பைப் பெற்றவன். மேலும் திரைப்பட ஆர்வலனும் கூட. அதுவே, அவனின் பிரச்சைனையை எதிர் கொள்ள உதவுகிறது.
அவன் கொலையை மறைக்கிறான். தடயங்களை அழிக்கிறான். பொய் சொல்கிறான். போலிஆவணங்களை உருவாக்குகிறான். குடும்பத்தினர் அனைவரையும் பொய்களை கூற வைக்கிறான். ஏமாற்றுகிறான். மிகவும் தந்திரமாகச் செயல் பட்டு சக மனிதர்கள், நண்பர்கள் அனைவரையும் பொய் சாட்சிகளாக்குகிறான். அவனது நல்லவன் என்கிற பிம்பம் அவனது அனைத்து பொய்களுக்கும், தந்திரங்களுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும், உண்மையானாவைகள் என நம்பச் செய்கின்றன. ஒரு திறமையான, புத்திசாலியான ஏமாற்றுக் காரன், பொய்யன், இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். இதெல்லாம் எதற்காக? குடும்பத்தைக் காப்பற்ற அல்லது தீமையை அழிக்க எனவும் கூறலாம். தீமையை அழிக்க அறம் சார்ந்த எந்த வழிகளும் பின்பற்றபட வில்லை. கடைசி காட்சியிலும் ஒரு ஏமாற்று வேலையுடன் படம் முடியும்.
இதற்கு நேர்மாறாக படைக்கப்பட்டது கலாபவன் மணி ஏற்றுள்ள பெருமாள் எனும் காவலர் பாத்திரம். பெருமாள் கெட்டவன், அயோக்கியன், மக்கள் பணத்தைக் பிடுங்கி தின்பவன், சக மனிதர்களிடம் மிகவும் கெட்டவன் என பேர் வாங்கியவன். அவன் படம் முழுவதும் ஒரு உண்மையை நிரூபிக்க முடியாமல் தத்தளிப்பான். கெட்டவனின் நல்லது நிலைக்காமல் போகிறது.
இப்படம் முழுக்க, முழுக்க இயக்குனரின் படம். நிச்சயமாக கமல் படமல்ல. இயக்குனர் முன்னிறுத்தும் அறம் எத்தகையது? அறம் சார்ந்து மதிப்பீடுகள் எல்லாம் இப்படத்தில் புறம் தள்ளப்படுகின்றன.
வரலாறு முழுதும், வாழ்க்கை முழுவதும் நடந்து கொண்டிருப்பது நன்மைக்கும் தீமைக்குமான போரட்டம்தான். நல்லவர்கள் எந்த வகை போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும்? காலங்காலமாக நமக்கு கூறப்பட்டதெல்லாம் அறம் சார்ந்த போராட்டங்கள்தான். காந்தி இந்திய சுதந்திரத்திற்கு அறம் சார்ந்த போராட்டங்களத்தான் கையிலெடுத்தார். இயேசு அதிகாரத்தை எதிர்த்து அறம் சார்ந்த போராட்டங்களைத்தான் முன் வைத்தார். இராம பிரான், நிராயுதபானியான எதிராளியைப் பார்த்து "இன்று போய் நாளை வா" என்கிறார்.
நல்லவர்கள் அருகி வரும் இக்காலங்களில் "பாப நாசம்" முன் வைக்கும் மதிப்பீடுகள் ஆபத்தானவையாகத் தோன்றுகின்றது. லஞ்சம் எனும் தீமையால் பாதிக்கப்பட்டவன், அதனிலிருந்து விடுபட அதை விட அதிக லஞ்சம் கொடுப்பது போன்றது, இப்படம் முன்னிறுத்தும் கருத்து. லஞ்சம், ஊழல் வாழ்வு முறையாகிப் போன ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. இப்படம் நல்லவர்களும் கெட்டவனாக மாறுவது தவறில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.
இதற்கு, ஏ.ஆர். முருக தாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படம் (2014) முன்னிறுத்தும் அரசியலும், போராட்டமும் எவ்வளவோ மேல். ஏழை விவசாயிகள் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள்.
சியோன் சோனா எனும் ஜப்பானிய இயக்குனரின் முக்கிய படைப்பான "கோல் ஃபிஷ்" (Cold Fish), பாப நாசம் படத்தின் கதையும் இது போன்றதுதான். அதன் இந்திய வடிவம் தான் பாப நாசம். ஆனால் இதைவிட பல மடங்கு சிறந்ததாக அப்படம் படைக்கப்பட்டுள்ளது. அங்கும் ஒரு நடுத்தர குடும்பம், இதே போன்று மகளால், ஒரு தீயவன் கையில் பாதிக்கப்படுகிறது. அந்தப் போரட்டத்தில் அந்த குடும்பம் சிதிலமாக்கப்படும். அந்த நல்லவன், தீமைக்கு எதிரான போராட்டத்தில், ஒரு மன நோயாளியாகி சாவான். அது ஒரு நேர்மையான படைப்பு.
படத்தின் நீளம் அதிகம். அதிகம் நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தென் காசியென்றால் திரும்ப, திரும்ப அந்த கோவிலை காண்பிக்கிறார்கள்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் பாப நாசம். திரையரங்குகளிலெல்லாம் மக்கள் வெள்ளம். இந்த பெரிய வெற்றி அச்சத்தையே தருகிறது.
Note: Images downloaded from Net.

Comments