Posts

Showing posts from August, 2014

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.

Image
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். வழக்கமான பார்த்திபன் படம்தான். அதே மாதிரியான கிண்டல், கேலி, நக்கல், நய்யாண்டி கவிதைத் தெறிப்புகள்.  சில இரட்டை அர்த்த வசனங்கள் ஆனால் அவரது: வழக்கமான குத்துப் பாட்டு இல்லை வழக்கமான தொப்புள் சீன்கள் இல்லை அடி தடி சண்டைகள் இல்லை. வில்லன் என்ற ஒரு ஆள் இல்லவே இல்லை. கதாநாயகி, கதாநாயகன் என யாரையும் கூற முடியாது. அப்புறம்  கதை என ஒன்றும் இல்லை என்பதுவும் உண்மைதான் முடிவு என ஒன்றும் இல்லை. சினிமா பற்றி பல விபரங்களைக் கூறுகின்றனர். சும்மா படம் முழுதும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் சில சமயங்களில் புன்னகைக்க முடிகிறது. பெரிதாக எதையும் சொல்ல வில்லை. பெரிதாகவும் எதுவும் இல்லை. அதனால் பெரிதாக எதையும் எழுத இயலவில்லை. ஆனாலும் படம் ஒடுகிறது. அதற்கு காரணம் சரியான மாற்றுப்படம் இல்லை.  பச்சக் குதிரை, உள்ளே வெளியே, புதிய பாதை  எடுத்தவரிடம் எதிர்பார்த்தது தவறுதான். தமிழ் சினிமாவில் ஏதோ புதியதாய் நடக்கிறது என்பதை பார்த்திபன் புரிந்து கொண்டிருக்கிறார், என்பதுதான் ஆறுதல்.  பார்த்திபன்,மீண்டும் இதே போல் எதுவும...

அஞ்சான் - மும்பை ரவுடிகளின் தலைவன்

Image
ரவுடிகளின் தலைவன் என பெயர் வைத்திருக்கலாம். ரவுடிகளின் சண்டை எனவும் பெயர் வைத்திருக்கலாம். இதற்கு பாம்பே போக வேண்டாம், தூத்துக்குடியோ, மதுரையோ போதும். கொஞ்சம் அரிவாள்கள் வேண்டும் அவ்வளவே. பீமாவின் உல்டா. அது ராம் கோபால் வர்மாவின்  சத்யா வில் ஒரு சிலவற்றை உருவியது. சத்யா -70%. அஞ்சான் - 7% விக்ரமிற்கு பீமா. சூர்யாவிற்கு அஞ்சான். பெரிய நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர். மனோஜ் பாஜ் பாயின் நடிப்பிற்காக சத்யாவைப் பார்க்கலாம் ரவுடிகள்    I T Employees போல் வருகின்றனர். மீட்டிங் போட்டுக் கொல்லுகின்றனர். சம்ந்தாவின் கவர்ச்சி, லிங்குசாமியின் புரட்சி. லிங்குசாமியின் அனைத்து படங்களின் கருவும் ஆனந்தம் படத்தில் உள்ளது.  லிங்குசாமிக்கு ஹிந்தி படம் எடுக்க ஆசை வந்திருப்பது போல் தெரிகிறது.  முக்கால் வாசி ஹிந்தி டயலாக்குகள். லிங்கு சாமி ஹிந்தியில் வசனம் எழுதுகிறார்ப்பா.  மும்பை நிழலுலகத்திப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் போல் படம் எடுத்துள்ளார்.  விக்கி பீடியாவில் நிறைய விபரஙகள் கிடைக்கும். பணத்தை வீணடித்திருக்கிறார்கள். படத்தின் காமெட...