A.R.Murga Doss - Ezhaam Arivu - An analysis.
 
 இந்தியாவின் ( வியாபர ரீதியில் பெரு ) வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ். தீனா, ரமணா, கஜினி ஆகிய தமிழ் படங்களையும், ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தையும், கஜினி என்ற இந்தி படத்தையும் இயக்கியுள்ளவர் ஏ.ஆர். முருக தாஸ். அவர் கதை சொல்லும்பாணி, அவருக்கேயான தனித்தன்மை வாய்ந்தது. அவரது காமிரா மொழி அதியசிக்கச் செய்வது, அதிர்ச்சிக்குள்ளாக்குவது, பயமுறுத்துவது, பிரமிப்பூட்டுவது.. ரமணா படத்தில் புகழ் பெற்ற சிறைக் காட்சியில் பெற்றோர்கள் ஒடிவரும் காட்சி ஒரு சிறந்த உதாரணமாகும். இது போல் பல சிறப்பான காட்சிகளைக் கொண்டது அப்படம். பெரும்பாலும் திரில்லர் ( thriller ) வகைப் படங்களை ஒத்தது அவரது படங்கள். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஏழாம் அறிவு ( அக்டோபர் 2011 ) திரைப்படம் பற்றி இக்கட்டுரை விமர்சிக்கிறது.                ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவ இளவரசரான போதி தர்மரின், மருத்துவ அறிவையும், தற்காப்பு கலை நுட்பங்களையும், தற்போதைய, அவரின் வம்சத்தைச் சார்ந்த நிகழ் கால மனிதனுக்கு, அதி நவீன மரபணு பொறியியல் ஆராய்ச்சி மூலம், நினைவுக்கு கொண்டு வந்து, நிகழ் கால ஆபத்திற்...
