இயக்குனர் வசந்த பாலனின் சினிமா - ஆய்வு.
 
      ஆல்பம், வெயில் மற்றும் அங்காடித் தெரு படங்களின் இயக்குனர் வசந்த பாலனின் நான்காவது படம் அரவாண் (மார்ச்-2012). தமிழுக்கு புதிய கதைகளம். யாரும் சித்தரிக்காத கிராமத்து வாழ்வு. புதுமையான கேமிரா கோணங்கள். இப்படி இப்படத்தின் பல சிறப்புகளைக் கூறிக் கொண்டே போகலாம். அவரது மற்ற எல்லாப் படங்களையும்விட மிக சிறப்பான தொழில் நுட்ப நேர்த்தியுடன் அமைந்துள்ளது, இப்படம் என்றால், அது மிகையில்லை.                                                                   களவையே தொழிலாகக் கொண்ட கள்ளர் நாட்டின்  ஒரு ஊரில் (வேம்பூர்) வசிக்கும் பசுபதி (கொம்பூதி) கொத்து  என அழைக்கப்படும் குழுவினருடன் களவுக்குச் செல்பவர். களவு பற்றிய அனைத்து நுட்பங்களும் தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. களவிலும் சில விதி முறைகள், தொழில் தர்மங்கள் உள்ளன. கருப்பன் அவர்கள் தெயவம்.   மாத்தூர் என்ற கிராமத்திற்கும், சின்ன வீரம்பட்டி ...
