Novel - Chapter 1
பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன
ம.ஜோசப்.
1
1
       அகல்யா, அகிலுக்காக கல்லூரி வாசலில் காத்திருந்தாள்.
அவன், அவளின் நிச்சயிக்கப்பட்ட காதலன். இருவரின் வீட்டினரும் கலந்து பேசி, வருகிற வைகாசியில்
திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். அவனும், அவளும் மாலை நேரங்களில் சந்தித்துக்
கொள்ள அனுமதி பெற்றுள்ளனர். அகில் இன்னும் வரவில்லை. அவள் சற்று கோபடைந்திருந்தாள்.
அப்போதுதான் அந்த அழைப்பு வந்தது. அகில்தான் என, கைபேசியை எடுத்தாள். ஏதோ ஒரு எண் இருந்தது.
யாராயிருக்கும்? என நினைத்தவாறே, ஹலோ, என்றாள். 
       அவளுக்கு அறிமுகமில்லாத ஒரு குரல். ஹலோ, அகல்யா,
ஆமா, அகல்யாதான்.
யா, அகல்யா, நா சொல்றத கவனமாக கேட்டுக்க, அகிலை கல்யாணம்
பண்ணாதே, பண்ணினா ரொம்ப வருத்தப்படுவே, ஒன்னை கொன்னாலும் கொன்னுருவாங்க. திஸ் இஸ் வெரி
சீரியஸ், அகல்யா. 
என, மறுமுனைத் துண்டிக்கப்பட்டது. மலர்ந்திருந்த அவள் முகம் மாறியது. தீடிரென
அவள் மேல் இருள் கவிழ்ந்தது.
       அவள் கலவரத்துடன் திரும்பினாள். அகில் வந்து
கொண்டிருந்தாள். ஹாய் அகல், என்றாள். அவளின் கலவர முகத்தைப் பார்த்து, தான் லேட்டாக
வருவதால்தான் அவள் கோபமாயிருக்கிறாள், என, சாரி என்றான். அவள் ஏதும் பேசாமல் வண்டியில்
ஏறினாள். பார்க்கிற்கு போலாமா? என்றான். ம், என்றாள். சற்று நேரம் இருவரும் ஏதும் பேசாமல்
பயணித்தனர். அவனிடம் இந்த விஷயத்தைக் கூறலாமா? வேண்டாமா? யார் அது? அவன் ஏன் என்னிடம்
கூற வேண்டும்.
       அவர்கள் பார்க் வந்துவிட்டனர். அவள் உற்சாகமில்லாமல்
இருப்பதை அகில் உணர்ந்தான். அவன் பேசுவதற்கெல்லாம், அவள் கடமைக்கே பதிலளிப்பதாய், அவனுக்குப்பட்டது.
அவளும் உற்சாகமாய் இருக்க எவ்வளவோ முயற்சித்தும், பலனில்லை. அவனுக்கு சற்று எரிச்சலாயிருந்தது.
ஒ.கே, நா கொஞ்சம் அவசரமாக கிளம்ப வேண்டியிருக்கு, நாளைக்கு மீட் பண்ணலாம், என அவன்
புறப்பட ஆரம்பித்தான். சாரி, அகில், எனக்கு கொஞ்சம் தலைவலி. நாளைக்கி பார்க்கலாம்,
என அவளும் கிளம்ப தயாரானாள். 
       அநேகமாக அவன்தான் காரணமாயிருக்கும்.
ஒரு கணம் சோகமான அவன் முகம் வந்து போனது.
ஏதோ ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்வதாகக் கேள்விப்பட்டிருந்தாள். அவள் படித்த கல்லூரியில் படித்தவன். சீனியர். அவன்
மிகவும் தீவிரமாக அவளைக் காதலித்தான். இவளும் அவனை காதலிக்கத்தான் செய்தாள். அவன் வேற
சாதி, மதம். வீட்டினர் யாரும் ஆதரவு தரமாட்டார்கள், எனத் தெரிந்தும், ஏதோ ஒரு உந்துதலில்
அவனைக் காதலித்தாள். இப்போது அவனை காதலித்திருக்கக் கூடாது, எனத் தோன்றுகிறது. 
திருமணம் குறித்த பேச்சு
எழுந்ததிலிருந்து, அவள் மனம் காதலிலிருந்து விடுபட ஆரம்பித்தது. நிச்சயம் செய்ததிலிருந்து
அவனை வெறுக்கவும் ஆரம்பித்தாள். அவனிடமிருந்து சிற்சில தொந்தரவுகள் ஆரம்பத்தில் இருந்தன.
பின்பு அவையும் மறைந்துவிட்டன. அவன் ஒருவேளை இத்திருமணத்தை நிறுத்த, இப்படி செய்வானோ?
அவனது குரல் நிச்சயமாக இல்லை. அவனது நண்பர்கள் யாராவது இருக்கலாம். இதை மாப்பிள்ளையிடமோ,
அவன் குடும்பத்தினரிடமோ கூறினால், திருமணம் தடைபடும். இப்பிரச்சினையை எப்படி சமாளிப்பது?
என அகல்யா, குழம்பிப்போய் வீடு போய் சேர்ந்தாள். 
அகிலின் அப்பா சொக்கலிங்கம்
வயது 60, வாசலில் ஒரு சேரில் அமர்ந்திருந்தார். அவளின் அம்மா உள்ளே ஏதோ வேலையாயிருந்தாள்.
அண்ணனும், அண்ணியும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். அகில் உள்ளே நுழைந்தான். அவன் அப்பா
அருகே ஒரு கடிதம் கிடந்தது. அது சொக்கலிங்கம் பேருக்கு வந்திருந்தது. அவன் அதை எடுத்து,
பிரித்து படிக்க ஆரம்பித்தான்:
உங்கள் குடும்பத்தின் சாபம், உங்களை ஆட்கொள்ளும் நேரம் வந்து விட்டது
என்பதை அறியுங்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. அதற்கான தண்டணை விரைவில் வழங்கப்படும்.
பெரியோர் முதல் சிறியோர் வரை யாரும் தயவு தாட்சயமின்றிக் கொல்லப்படுவீர்கள். உங்கள்
மேலும், உங்கள் சந்ததியினர் மேலும், கொலைவாள் ஒன்று ஊடுருவப் போகிறது. கரிய இரவு உங்களை
ஆக்கிரமிக்கப் போகிறது. 
கடிதத்தைப்
படித்த அகில் திகிலடைந்தான். சொக்கலிங்கம் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார். அவர்
மனைவி அலமேலு, உள்ளே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். 
Comments