Novel - Chapter 2
        பாம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன                    2           சொக்கலிங்கம் அதிகாலையில் தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி சாலையில் நடை பயணம் சென்று கொண்டிருந்தார். கோடை காலத்தின் அதிகாலைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை. இதமான தென்றல் வருடிச் செல்வது யாருக்குதான் பிடிக்காது? சர்க்கரை வியாதியால்தான் இவரும் நடை பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். அவரது வாழ்க்கை ஒட்டத்தின் இறுதியில், இங்கு, இப்படி ஒடுவார் என அவரே, நினைத்தறியாதது. அவர் பின்னே தொலைவில் ஒரு  ஆம்னி வேன் வந்து கொண்டிருந்தது.         அவர் தனது பூர்வீக கிராமத்தைவிட்டு வந்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. கிராமத்து நினைவுகள் அவர் மேல் ஒரு மலரின் வாசம் போல் வந்திறங்கின. தோட்டம், தோப்பு, வயல்வெளிகள், வேலையாள்கள், உறவினர்கள், கிராமத்து மக்கள் என அனைவரையும் விட்டு விட்டு வந்தாகிவிட்டது. அவரது அப்பாவின் காலத்தில் இருந்த அவர்கள் குடும்ப செல்வாக்கை, தற்போது நினைத்தால் அழுகையே வந்துவிடும். அந்த ஆம்னி வேன் நெருங்கிக் கொண்டிருந்தது.     ...