சில காதல் கவிதைகள் - ஜோசப் மரியமைக்கேல்


அவளின் காதல் குறித்து.

  -------------------------------               

பூங்காவில் அவளின்

காதலன் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.

அவளைச் சுற்றி வரும் ஆண்களை நோட்டமிட்டபடியே.

                                ****

என் காதல் குறித்து.

------------------------------

காலம் கடந்து முளைத்திருந்தது விடிவெள்ளி.

அதற்குள்,

நன்கு விடிந்துவிட்டது.

                            ****

காதலர் தினத்தில்

-------------------------

உன்னை மட்டுமே, உயிருக்குயிராய் காதலிப்பதாக,

ஒரு மலர் மற்றும் இதயம் வரையப்பட்ட,

காதல் ததும்பும் அந்த வாழ்த்து அட்டையை,

அவனிடம் மிகுந்த அன்போடு கொடுத்தாள்.

அதே போன்ற இன்னும் பல அட்டைகளை

தனது கைப்பையில் அவள் வைத்திருப்பது,

அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

                            *****

காதலிப்போரும், திருமணமானோரும்.

---------------------------------------------------------------- 

ஒரு பிரச்சினை எனில்,

காதலிப்போர்

காதலியிடம் மட்டுமே சண்டையிட நேரும்.

திருமணமானோருக்கோ

மனைவியுடன் மட்டுமல்ல,

அவள் குடும்பத்துடனும்,

சண்டையிட வேண்டியிருக்கும்,

பாக்கியம் உள்ள சிலருக்கு,

அவளின் முன்னாள் காதலனுடனும்.

                                        ****


Comments

Popular posts from this blog

துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது சுஜாதாவிற்குப் பின் துப்பறியும் நாவல்கள்? ம.ஜோசப்

பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும் - ஜோசப் மரியமைக்கேல்.

யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி - ம. ஜோசப்