சில காதல் கவிதைகள் - ஜோசப் மரியமைக்கேல்
அவளின் காதல் குறித்து.   -------------------------------                      பூங்காவில் அவளின்   காதலன் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.   அவளைச் சுற்றி வரும் ஆண்களை நோட்டமிட்டபடியே.                                        **** என் காதல் குறித்து. ------------------------------ காலம் கடந்து முளைத்திருந்தது விடிவெள்ளி. அதற்குள்,         நன்கு விடிந்துவிட்டது.                                   **** காதலர் தினத்தில் ------------------------- உன்னை மட்டுமே, உயிருக்குயிராய் காதலிப்பதாக, ஒரு மலர் மற்றும் இதயம் வரையப்பட்ட, காதல் ததும்பும் அந்த வாழ்த்து அட்டையை, அவனிடம் மிகுந்த அன்போடு கொடுத்தாள். அதே போன்ற இன்னும் பல அட்டைகளை தனது கைப்பையில் அவள் வைத்திருப்பது,               அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ...