ஒடுக்கப்பட்டோரின் போராளி
   ஒடுக்கப்பட்டோரின் போராளி   முனைவர்.ம.ஜோசப்             மக்கள் அடிமைப்பட்டுக் கிடந்தனர். சுமக்க முடியாத சுமைகளை சுமந்தனர். வரி கட்ட முடியாமல், வரி வசூலிப்போரின் கொடுமைகளால் அல்லலுற்றனர். ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியின் கொடுங்கோலாட்சியின் துயரங்களால் துவண்டுபோய் கிடந்தனர். பெண்களின் நிலையோ, மிருகங்களை விட கீழானதாய் இருந்தது. அவர்களது அடிமை வரலாறு மிக நீண்டது. ஏறக்குறைய 600 ஆண்டுகளாய் அடிமை வாழ்க்கை வாழ்ந்திருந்தனர். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாமல் பல தலைமுறைகள் செத்தொழிந்து போயிருந்தனர். ஏழைகள், பெண்கள், சாமன்யர், சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள், உழைப்போர்,விவசாயிகள் மீது வாழ்வினை ஒடுக்குவோர் கூட்டத்தின் அட்டூழியங்கள் கணக்கிடங்கா.  ஒடுக்கப்பட்டோரை விடுவிக்கும் மீட்பர் யார்? அவர்களின் புராணங்களின் உரைக்கப்பட்டபடி அவர்களை மீட்கும் ஒரு விடிவெள்ளியை எதிர்பார்த்திருந்து காத்திருந்தனர் மக்கள் கூட்டம்.         அந்த தேசம் யூதேயா. அச்சமூகம் யூத சமூகம் காலம் கி..மு. 1 ஆம் நூற்றாண்டு. அந்த ஏகாதிபத்தியம் ரோமப் பேரரசு. பேரரசர் அகஸ்டஸ் சீசரின் ஆட்சி காலம். பெரிய ஏரோது (வரலா...