பாப நாசம் தரும் பாவமான படிப்பினை.
 
  பாப நாசம் தரும் பாவமான படிப்பினை                                                                      ம.ஜோசப்.    ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல் ஹாசனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் திரைப்படம் பாப நாசம் (2015). ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளி வந்த திர்ஷ்யம் என்ற படத்தின் தமிழ் வடிவம் (ரீமேக்). தமிழில் சமீபத்தில் வெளிவந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான படமும் கூட.     பத்திரிக்கைகள், விமரிசகர்கள், திரைப்பட ஆர்வலர்கள், டிஜிட்டல் ஊடகங்கள், இப்படி அனைவரால் சிலாகிக்கப்படும் படம் தான் பாபநாசம். மிகவும் புத்திசாலித்தனத்துடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, கமல் ஹாசனின் அற்புதமான நடிப்பு, நவீன காலத்தின் மிக முக்கியான பிரச்சினையைப் சொல்லும் கதை, சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ள கலா பவன் மனி, ஆஷா சரத், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பிற கதா பாத்திரங்கள், எழுத்தாளர் ஜெய மோகனின் வசனம் இப்படி பல ஆகச் சிறந்தவைகளுடன் திரையர...