பாய்ஸ் கம்பெனி காலத்து வெயில் - காவியத்தலைவன் (Kaviya Thalaivan - Review)
 
  பாய்ஸ் கம்பெனி காலத்து வெயில்.   ம.ஜோசப்.     காவியத்தலைவன் (நவம் – 2014) நாசர், சிதார்த், ப்ரித்வி ராஜ், வேதிகா, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, எழுத்தாளர் ஜெய மோகனின் வசனத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வசந்த பாலனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படமாகும். பாய்ஸ் நாடக கம்பெனிகள் தமிழ் நாட்டில் கோலோச்சிய காலத்தின் (ஏறக்குறைய 1870 - 1930) கதை நடக்கிறது. (படத்தில் காலம் பற்றி தெளிவாக ஏதும் கூறப்படவில்லை;)     அக்காலத்தில் அப்படி இருந்த ஒரு பாய்ஸ் கம்பெனி போல ஒரு புனைவு (கற்பனை எனக் கொள்ளலாம்) டிராமாக் கம்பெனி தான்  படத்தின் கதைக் களம். அதன் மாந்தர்கள்தான் படத்தின் கதா பாத்திரங்கள். ஒரு சில மாந்தர்களும் அக்காலத்தின் வாழ்ந்த மனிதர்களின் புனைவாகத்தான் படைக்கப்பட்டுள்ளனர். சங்கர தாஸ் சுவாகிகள், எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் போன்றோர்கள் வாழ்ந்த கால கட்டம். படத்தின் சில புனைவு பாத்திரங்கள் சிவ தாஸ் சுவாமிகள், காளியப்பா, வடிவாம்பாள்.    வசந்த பாலன் நிறைய இப்படத்திற்கு உழைத்துள்ளார். படித்திருக்கிறார். வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யும் அவரது எண்ணம் போற்றுதலுக்...