தமிழ் சினிமாவில் கிறிஸ்துவர்கள்
      தமிழ் சினிமாவில் கிறிஸ்துவர்கள்   ம.ஜோசப்     ராயப் பேட்டை நர்சு பேரு மேரி   நான் வாங்கித் தந்தேன் அரபு நாட்டு சேரி   கேள்விப்பட்டேன் மாமா பேரு மாரி   ஒண்டித் தோப்பு மாரி   நான் ஜகா வாங்கி கேட்டுப்புட்டேன் சாரி,   அயாம் வெரி சாரி.                 தேவா இசையமைப்பில் 90களில் வந்த இப்பாடல், இக்கட்டுரையில் சொல்ல வேண்டிய விபரங்களின் சாரத்தை சுருக்கமாகக் கூறிவிடுகிறது. தமிழ் சினிமா கிறிஸ்தவர்களைப் பற்றிய என்ன நினைக்கிறது என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். தமிழ் திரைப்படங்களில் கிறிஸ்துவர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர்? என்பதைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.           கிறிஸ்துவ மக்களை குறிவைத்து எடுக்கப்படும் ஒரு வகைப் படங்கள் உள்ளன. இவைகளை பக்தி படங்கள் என்ற வகையில் சேர்க்கலாம். அன்னை வேளாங்கண்ணி, வில்லியனூர் மாதா, கருணாமூர்த்தி, ஜீசஸ், ஸ்வாதி நட்சத்திரம், ஞான சௌந்தரி போன்றவை இவ்வகைக்கு சில உதாரணங்களாகும். இவ்வகைப் படங்களைப் பற்றி இக்கட்டுரை பேசவில்லை.     கிறிஸ்தவ பெண்கள்       ...