பொறியியல் கல்லூரி முதல்வர் - ஒரு பலியாடு.
  பொறியியல் கல்லூரி முதல்வர் - ஒரு பலியாடு.                                         தமிழகத்தேயே உலுக்கிய ஒரு கொலை தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்துள்ளது. கல்லூரி வட்டாரங்களில் பேராசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்  பரபரப்பாகப் பேசப்படும் சம்பவமாகி உள்ளது. பொறியியல் கல்லூரி முதல்வர், கல்லூரி வளாகத்திலேயே அவரது மாணவர்களாலேயே கொல்லப்பட்டிருக்கிறார். கல்லூரி முதல்வர்களுக்கு கொடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையாகவே இது தோன்றுகிறது. இது உணர்ச்சி வேகத்தில் நடந்த கொலையில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று, அதற்குமுன் அவருக்கு மரண மிரட்டல்களும் வந்துள்ளன. அழிந்தது, முதல்வரின் வாழ்வு மட்டுமல்ல, மூன்று மாணவர்களின் வாழ்வும் தான். ஏன் கல்விக் கூடங்கள் வாழ்க்கையை உருவாக்காமல், வாழ்வை அழிக்கும் கூடங்களாக மாறின? மாணவர்கள் ஏன் கொலை செய்கிறார்கள்? முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏன் மாணவர்களின் பகைவர்களாகிப் போயினர். பொறியியல் கல்லூரிகளில் என்ன நடந்து கொண்டிரு...