Posts

Showing posts from December, 2017

கிறிஸ்துவும், சாதியும்.

Image
கிறிஸ்துவும், சாதியும். ம.ஜோசப். பன்னெடுங்காலம் முதல் தமிழகத்தில் சாதிப் பாகுபாடு நிலவி வருவதும், அதனால் சமூகத்தில் நடைபெறும் கொடுமைகளும் யாவரும் அறிந்ததே. மிக நவீன காலமான இப்போதும், சாதியக் கொடுமைகள் குறைவதற்கு பதிலாக, அதிகரித்தபடியே உள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் பரவியது. தற்போது, ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church), தென்னிந்திய திருச்சபை ( Church of South India )   உட்பட பல திருச்சபைகள் உள்ளன. தமிழக கிறிஸ்துவர்களிடையே சாதிப் பாகுபாடு நிலவிவருவது யாவரும் அறிந்ததே. கிறிஸ்தவர்களிடையேயும் சாதிக் கொடுமைகளுக்கு சிறிதும் குறைவில்லை. கிறிஸ்துவத்தைத் தோற்றுவித்தவரான இயேசு கிறிஸ்து சாதியைப் பற்றி என்ன போதித்தார்? கிறிஸ்துவின் காலத்தில் சாதி இருந்ததா? அவர் சாதிக்கு ஆதரவானவரா?. ஆகியவற்றை பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. பேரரசர் அகஸ்டஸ் காலத்தில், இயேசு கிறிஸ்து கி.மு. 5 ஆம் ஆண்டில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவிலுள்ள பெத்லேகமில் பிறந்தார். கி.பி. 27 முதல் கி.பி. 30 வரை, யூதேயா மற்றும் கலிலேயா பகுதிகளில் போதித்தார். ஏறக்குறைய கி.பி.30-ல்...