கருப்பு சாம்ராஜ்யம் - ஜோசப் மரியமைக்கேல்
     சோழமண்டலக் கடற்கையில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அவன் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன் பாண்டிய நாட்டு பிரஜை. பாண்டிய நாட்டில் தற்போது உருவாகி வரும், சுதந்திர தாகம் கொண்ட குழுக்கள் ஒன்றில் அவன் இருந்து வந்தான். அவன் தாய்நாடு   விடுதலை அடைய வேண்டும் என வேகம் கொண்டவன். பல காலமாக பாண்டியர்கள், சோழர்களின் அடிமையாகவே வாழ்ந்து வந்தனர்.   பாண்டிய மன்னனோ நாடிழந்து காடுகளில் சுற்றி அலைகிறான். பிரஜைகளோ அடிமை சேவகம் புரிந்து வருகின்றனர். தம் மக்கள் படும் துயரத்தை காண சகியாமல் கோபமுற்ற அவனை, விடுதலை வேட்கை குழுவில், ஒரு துறவி சேர்த்து விட்டிருந்தார். அங்கு போர்ப் பயிற்சிகள் செய்து வந்தனர்.அது ஏறக்குறைய ஒரு சாவேற்றுப் படையாகும். சிறு சிறு குழுக்களாக அந்த விடுதலை வேட்கை குழுக்கள் இயங்கி வந்தனர். அவன் அந்த குழு தலைவனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினான். தலைவனின் பதில்கள் திருப்தியை தரவில்லை. குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி ஒரு வணிகர் போல் வேடம் தரித்து சோழ நாட்டிற்கு வந்தான்.   அவன் தலைமறைவாக வாழ்ந்த அந்த வாழ்வை வெறுத்தான். சோழநாடு வளமுடையது என்கிறார்கள். அதனைப் பார்க்கலாம், மேலும், இருண்ட வ...