தமிழ் சினிமாவில் காதல் மற்றும் சாதி
    தமிழ் சினிமாவில் காதல் மற்றும் சாதி   எம்.ஜோசப்      “காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்   கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்     காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்    கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்   ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!   அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;   காதலினால் சாகாமலிருத்தல் கூடும்   கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."                                                                                           பாரதியார்.     அமீரின் பருத்தி வீரன், பாலாஜி சக்திவேலின் காதல், வசந்தபாலனின் அங்காடித் தெரு மற்றும் சேரனின் பாரதி கண்ணம்மா ஆகிய படங்களைப்பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. இப்படங்களை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்? என்பதை பின்பு பார்க்கலாம். அதற்குமுன் ஒரு வசதிக்காக, இப்படங்களின் கதை சுருக்கங்கள் கீழே தரப்படுகின்றன:    காதல்    ...